நாள்: 22.02.2024 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.00 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் சரிவை சரிசெய்வதற்கான சூழல்கள் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
ரிஷபம்
விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார இடமாற்ற முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு உயரும். புதுவிதமான அணிகலன்கள் சேர்க்கை ஏற்படும். இன்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். வியாபார வியூகங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். சூழ்நிலை அறிந்து திறமைகளை வெளிப்படுத்தவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான முடிவு ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.
கடகம்
உறவுகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வித்தியாசமான கனவுகளால் குழப்பங்கள் ஏற்படும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.
சிம்மம்
ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் திடீர் விரயங்கள் உண்டாகும். பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஜெயம் நிறைந்த நாள்.
கன்னி
மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளால் லாபம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். பணியில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். களிப்பு நிறைந்த நாள்.
துலாம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பரிசு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
மனதளவில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். செலவுகளை சமாளிப்பதற்கான சூழல்கள் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வெளிநாட்டு பணிகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி வழி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
தனுசு
சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களிடம் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். சஞ்சலம் நிறைந்த நாள்.
மகரம்
மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகள் ஓரளவு குறையும். உயர்வு நிறைந்த நாள்.
கும்பம்
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
மீனம்
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். முயற்சி நிறைந்த நாள்.