ஆலியாபட், ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் நடித்திருந்த சதக் 2 படத்தில் நடித்திருந்தவர், கிறிசன் பெரேரா. இவர், ஒரு தொடரின் நடிகர்கள் தேர்விற்காக இந்த மாதத்தின் தாெடக்கத்தில் துபாயில் உள்ள ஷார்ஜாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவர் எடுத்து வந்திருந்த பையில், சிறிய அளவு போதை பொருள் இருந்ததாக கூறி அவரை ஷார்ஜா போலீசார் கைது செய்தனர். 


சிறை தண்டனை:


போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கிறிசன் பெரேரா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சமரசம் செய்யாத நாடுகளில் ஒன்று, துபாய். அங்கு போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்குவோர் கடுமையான சிறை தண்டனையை அனுபவிப்பார். அந்த வகையில், நடிகை கிறிசன் பெரேரா ஷார்ஜா சிறையில் சிக்கியுள்ளார். இவர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து 26 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து நடிகை விடுதலை செய்யப்பட்டுள்ளார். 




இதைத்தொடர்ந்து, தனது இன்ஸ்டா பக்கத்தில் கிறிசன் பெரேரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கழிவறையில் நீரில் காபி போட்டு குடித்ததாகவும் துணி துவைக்கும் பவுடரை பயண்படுத்தி தலைக்கு குளித்ததாகவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது முழு கடிதம் பின்வருமாறு, 


“பேனாவையும் காகிதத்தையும் கண்டு பிடிக்க எனக்கு 3 வாரங்கள் ஆகிவிட்டது. கழிவறை நீரில் காபி போட்டு குடித்து, துணி துவைக்கும் பவுடரில் தலைக்கு குளித்த பிறகு நான் சில பாலிவுட் படங்களை பார்த்தேன். அதை பார்த்த போது என்னுடைய கனவுதான் என்னை இதுவரை கொண்டு வந்துள்ளது என்பதை உணர்ந்தேன். நான், இந்தியராக இருப்பதற்கும் இந்தியாவை சேர்ந்த திரைத்துறையில் இருப்பதையும் நினைத்து பெருமையாக உணர்கிறேன்” என்று தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த கடிதத்தில் கிறிசன் பெரேரா கூறியிருந்தார். 


கிரிஸானை சிக்க வைத்த நபர்:


மும்பையை சேர்ந்த ஆண்டனி பால் என்ற நபர்தான் கிறிசன் பெரேராவை போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளார். கிறிசன் பெரேரா மற்றும் அவர் குடும்பத்தினர் தங்கியுள்ள அதே அடுக்குமாடி குடியிருப்பில்தான் அந்த நபரும் தங்கியிருந்துள்ளார். பெரேரா வழக்கில் ஆண்டனியை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது. 




பழிவாங்கும் நோக்கம்!


காவல் துறையினரின் தீவிர விசாரணைக்கு பிறகு, ஆண்டனி பால் குறித்த பல உண்மைகள் வெளிவந்துள்ளன. பட்டப்படிப்பு வரை முடித்துள்ள இந்த நபர், 2012ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியாவில் இருந்துள்ளார். இதையடுத்து மும்பைக்கு குடிபெயர்ந்துள்ள இவர், கேக் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததார். இவர், பலரை போதை பொருள் வழக்கில் சிக்க வைக்கும் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அவரால் இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆவது ஆளாக, பாலிவுட் நடிகை பெரேராவும் சிக்கியுள்ளார். 


ஒரு தெருநாயை தாக்க இருந்த ஆண்டனியை நடிகை கிறிசனின் தாயார் தடுத்து நிறுத்துயுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஆண்டு நிகழ்ந்துள்ளது. இரண்டாவது கொரோனா அலையின் போது, முகக்கவசம் அணியுமாறு ஆண்டனியிடம் காட்டமாக நடிகையின் தாயார் கூறியுள்ளார். இதனால் கடுப்பான ஆண்டனி, கிறிசன் குடும்பத்தாரை பழிவாங்கும் நோக்கில் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என மும்பை போலீஸார் கூறியுள்ளனர் 




யார் இந்த ஆண்டனி?


ஆண்டனி எனும் இந்த நபர், கடந்த ஆண்டில் மட்டும் 4 பேரை போதை பொருள் கடத்தல் வழக்கில் பழிவாங்கும் நோக்கத்திற்காக சிக்கவைத்துள்ளார். அவர் பழிவாங்க நினைக்கும் நபர்களை ஏதாவதொரு கதையைக்கட்டி ஷார்ஜாவிற்கு பயணம் செய்ய வைத்து, அவர்களுக்கு தெரியாமல் சிறிய அளவிளான போதை பொருளை அவர்கள் எடுத்து செல்லும் பையில் போட்டுவிடுவாராம்.


பின்பு இவரே, ஷார்ஜாவில் உள்ள காவல் துறையினருக்கு போதை பொருள் எடுத்து வரும் நபர் குறித்த தகவல்களை கூறி அவர்களை சிக்கவைத்துவிடுவாராம். இது மட்டுமன்றி, அப்படி இவர் சிக்கவைத்த நபர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் தனக்கு ஷார்ஜாவில் ஒரு வழக்கறிஞரை தெரியும் எனக்கூறி பணம் பறிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவாராம். சமீபத்தில் சிக்கிய நடிகையின் குடும்பத்தினரிடமிருந்து 80 லட்சம் வரை அந்த நபர் பணம் கரக்க முயற்சித்ததாக ஆண்டனியை விசாரணை செய்த போலீஸார் தெரிவித்துள்ளனர்.