ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் அறைந்து சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு அச்சம்பவம் குறித்து க்ரிஸ் ராக் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நாயகனுக்கான ஆஸ்கர் வென்ற கையோடு. அந்த விழாவை தொகுத்து வழங்கிய பிரபல காமெடியனான கிறிஸ் ராக்கை மேடையில் அறைந்து உலக அளவில் பரபரப்பைக் கிளப்பி வில் ஸ்மித் ட்ரெண்ட் ஆனார்.
அறைக்குப் பிறகு ஆன்மிகப் பயணம்
வில் ஸ்மித்தின் இந்த செயல் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், அடுத்த நாள் வில் ஸ்மித் பகிரங்க மன்னிப்பு கோரினார். எனினும் வில் ஸ்மித் தனிப்பட்ட முறையில் க்ரிஸ் ராக்கிடம் மன்னிப்பு கோராமல் இருந்து வந்தார்.
முன்னதாக வில் ஸ்மித் ஆன்மிகப் பயணமாக இந்தியா வந்த நிலையில், ஆங்கில பத்திரிக்கைகளால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
4 மாதங்களுக்குப் பிறகு பேசிய க்ரிஸ் ராக்
மேலும் க்ரிஸ் ராக்கும் இச்சம்பவம் குறித்து வெளிப்படையாக இதுவரை எதுவும் கூறாமல் இருந்த வந்த நிலையில், சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு வில் ஸ்மித்தின் செயல் குறித்தும், இச்சம்பவம் குறித்தும் க்ரிஸ் ராக் பேசியுள்ளார்.
”வார்த்தைகள் புண்படுத்துவதாகச் சொல்லும் எவரும் முகத்தில் குத்த மாட்டார்கள்.. நான் பாதிக்கப்பட்டவன் அல்ல. ஆனால், எனக்கு அன்று வலித்தது. ஆனால் நான் அதை உதறிவிட்டு அடுத்த நாள் வேலைக்குச் சென்றேன். இதுபோன்ற சிறு விஷயங்களுக்கு நான் மருத்துவமனை செல்வதில்லை” என தன் பிரத்யேக நகைச்சுவையுடன் பதில் அளித்துள்ளார்.
ஆஸ்கர் சம்பவம்
வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்க்கெட்டின் தலையில் முடி இல்லாதது பற்றியே க்றிஸ் ராக் பேசியிருந்தார். ஆலோபீசியா (alopecia) என்னும் நோயினால் அவதிப்பட்டு வருகிறார் ஜடா பிங்க்கெட் ஸ்மித். இதனால் அவர் தலையில் உள்ள முடி கொட்டத் தொடங்கியது. இதுகுறித்துப் பொதுவெளியில் 2018ஆம் ஆண்டு அறிவித்தார் ஜடா ஸ்மித். இதைத் தொடர்ந்து முடியை முழுவதுமாக மழித்து, மொட்டையும் அடித்துக்கொண்டார்.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி ஜடா பிங்கெட் (Jada Pinkett) பற்றி உருவக்கேலி செய்ததற்காக ஆஸ்கர் விருது நிகழ்வில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை (Chris Rock) டிகர் வில் ஸ்மித் (Will Smith), கன்னத்தில் அறைந்தார். காமெடி நடிகர் கிறிஸ் ராக்ஸ் கன்னத்தில் அறைந்த விவகாரத்தில் வில் ஸ்மித் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து, academy of motion picture arats and science அமைப்பின் பதவியை வில் ஸ்மித் ராஜினாமா செய்தார்.