பிரபல நடிகர் பாக்கியராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்த ஜாம்பவான் சின்னா உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.


தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் மிகச் சிறப்பான நடனத்திற்கு பின், முக்கிய காரணமாக இருந்தவர் நடன இயக்குநர் சின்னா. இவர் கடந்த ஒரு மாதம் காலமாக நடக்க முடியாம் கடுமையாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






முந்தானை முடிச்சு படத்தில் பாக்கியராஜின் சிறப்பாக ஆடுவதற்கு சின்னாதான் நடன இயக்குநராக பணியாற்றி இருந்தார். பாக்கியராஜ் சிறப்பகா ஆட்டத்தை வெளிப்படுத்த அவருக்கு பல நடன அசைவுகளை கற்றுக்கொடுத்திருந்தார். 


நடிகர் அஜித்-ன் அமராவதி, விஜயகாந்த -விஜய் நடித்த செந்தூரபாண்டி, ஆனந்தம் படத்தில் ’பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்.. பாடல், உள்ளிட்ட பல பாடல்களுக்கு இவர் நடன இயக்குநராக அதனை ஹிட்டாகியிருக்கிறார். 


சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிருக்கிறார். தனது 69 வயதில், வாழ்நாள் முழுவது ஆடிய கால்கள் நகர கூட முடியாமல் அவதிப்பட்டுள்ளார். தொடர் சிகிச்சை பலனின்றி உயரிழந்திருக்கிறார். மேலும், இவரது மரணம் குறித்து தமிழ் திரையுலகினருக்கு தெரிவிக்காததால், யாரும் இறுதி அஞ்சலியில் பங்கேற்கவில்லை என்று பலரும் வேதனையுடன் கூறிவருகின்றனர். 


இது குறித்து அவருடைய மகள் நந்திதா வருத்ததுடன் தனது இன்ஸ்டாகிட்ராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






நடிகை நந்திதா, பாக்கியலெட்சுமி, நாகவள்ளி, புவனேஸ்வரி, அம்மன் உள்ளிட்ட் பல பிரபல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண