Golden Visa: ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற சீயான் விக்ரம்... துபாயில் மேள தாளத்துடன் வரவேற்பு!

ஐக்கிய அரபு அமீரகம் நடிகர் சீயான் விக்ரமுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி இந்த விசாவினை நடிகர் விக்ரமுக்கு வழங்கினர்.

Continues below advertisement

ஐக்கிய அரபு அமீரகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோலிவுட் திரை பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுவது தான் கோல்டன் விசா. இந்த கோல்டன் விசா உரிமையை பெற்றவர்களுக்கு அங்கு பணிபுரிய, படிக்க, வியாபாரம் மேற்கொள்ள என அந்த நாடு பிரஜைக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement

 

நடிகர் விக்ரமுக்கு கோல்டன் விசா :

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம் துபாய் சென்றபோது அவருக்கு அங்கு ராஜா மரியாதையுடன் மேள தாளம் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டு இந்த கோல்டன் விசாவையும் வழங்கியுள்ளனர். நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவரான ஷானித் ஆசிப் அலி இருவரும் இந்த கோல்டன் விசாவினை நடிகர் விக்ரமுக்கு வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கள் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

 

 

கோல்டன் விசா பெற்ற மற்ற பிரபலங்கள்: 

இது போல கோல்டன் விசா பெற்ற திரை பிரபலங்கள் சிலர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பார்த்திபன், சஞ்சய் தத், துல்கர் சல்மான், ஷாருக்கான், மோகன்லால் காஜல் அகர்வால், மீனா, த்ரிஷா, ஆண்ட்ரியா, அமலா பால் மற்றும் பலருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கோல்டன் விசாவை நடிகர் விக்ரமுக்கு வழங்கிய நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர் ஷானித் ஆசிப் அலி இருவருக்கும் ஏற்கனவே கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் நடிகை பூர்ணாவிற்கு துபாய் தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது. 

 

'தங்கலான்' திரைப்படத்தில் நடிகர் விக்ரம் :

நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓர் சரித்திர திரைப்படமான 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிப்பிற்காக எந்த அளவிற்கு வேண்டும் என்றாலும் ரிஸ்க் எடுத்த சற்றும் தயங்காத நடிகர் விக்ரம் இப்படத்தில் ஒரு ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரின் ஜோடியாக பார்வதி மற்றும் மாளவிகா மோகன் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்துள்ளார். இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் உரிமையை நெட் பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்ற நடிகர் விக்ரம் இப்படம் மூலம் தனது வித்தியாசமான நடிப்பால் கவர்வார். 

Continues below advertisement