Chiyan Vikram: அதே கூட்டணி மாறுபட்ட கதைக்களம்... மீண்டும் இணையும் அஜய்-விக்ரம் 


அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. படத்தின் விளம்பரத்தில் மிகவும் பிஸியாக இருந்து வரும் நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய அறிவிப்பை கொடுத்துள்ளார். 


மீண்டும் இதே கூட்டணி:


சியான் விக்ரம், கோப்ரா படத்திற்கு பிறகு அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து மற்றுமொரு படம் உருவாக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். பா. ரஞ்சித் - சீயான் விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் சீயான் 61 படம் முடிவடைந்தவுடன் புதிய திட்டம் 2023ல் தொடங்கும் என்றார். 


 






ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கவிருக்கும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட்கான இறுதி கட்ட வேலைகளை விரைவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் திரைக்கதை ஒரு தனித்துமான கதை என்று கூறப்படுகிறது. ஆனால் படம் குறித்த மற்ற விவரங்கள் எதுவும் இதுவரையில்  அறிவிக்கப்படவில்லை. 


பெரிய திரை பட்டாளம்:


ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் கோப்ரா திரைப்படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்கிறார் கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி. மேலும் படத்தில் இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, சர்ஜானோ காலித், மியா ஜார்ஜ், பத்மப்ரியா ஜானகிராமன், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், ரோபோ சங்கர் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் என ஒரு பெரிய திரைபட்டலாமே இப்படத்தில் நடித்துள்ளனர். 



வித்தியாசமான கெட் அப் ஏன்: 


கோப்ரா திரைப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கின்றனர். கோப்ரா படத்தில் விக்ரம் பல வித்தியாசமான கெட் அப்களில் நடிப்பது குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து " கோப்ரா எப்படி தனது தோலை உதிர்கிறதோ அதே போல பெயரையும் தோற்றத்தையும் மாற்றுவதை தான் அந்த கதாபாத்திரம் குறிக்கிறது" என்றார். 


 






பிஸி ஷெட்யூல்: 


இதற்கிடையில் விக்ரம், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பிரமாண்டமான காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" வெளியீட்டிற்காக காத்து கொண்டு இருக்கிறார். அப்படம் செப்டம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார். ஆக மொத்தத்தில் சீயான் விக்ரம் அடுத்தடுத்து மிகவும் பிஸியாக இருக்கிறார் என்பது உறுதியாகிறது.