பொன்னியின் செல்வன்:


பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, ரசிகர்களின் பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என பாதி திரையுலகமே இப்படத்தில் நடித்திருந்தது.தமிழ் சினிமா வரலாற்றில் பல ஆண்டுகளுக்கு பின்னர் ரசிகர்கள் திருவிழா போல இப்படத்தினைை கொண்டாடி வருகின்றனர். படத்தின் ரிலீஸிற்கு முன்னர் படக்குழுவும் கேரளா, மும்பை, டெல்லி ஹைதராபாத் என முக்கிய நகரங்களுக்கு மாறி மாறி சென்று ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது. இதன் இரண்டாம் பாகமும் கூடிய விரைவில் வெளிவர இருக்கின்றனது. 




ஆதித்த கரிகாலனாக விக்ரம்:


சேது முதல் கோப்ரா வரை எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதுவாகவே வாழ்ந்து யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல இருப்பினும், ஆதித்த கரிகாலனுக்கு கதையில் பெரும் பங்கு உண்டு. இந்த கதாப்பாத்திரத்தில் கலக்கியிருந்தார் நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தின் போர் காட்சிகளில் ஆக்ரோஷமான இளவரசனாக வந்து, ரசிகர்களை மிரள வைத்து விட்டார் விக்ரம். பிற கதாப்பாத்திரங்களை ஆராய்ந்து, “இது அப்படி இருந்திருக்கலாம் அது இப்படியிருந்திருக்கலாம்” என கருத்து கூறுபவர்கள் கூட மனதார ஏற்றுக்கொள்ளக்கூடிய கதாப்பாத்திரமாக இருந்தது ஆதித்த கரிகாலனின் கேரக்டர். படமும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால், படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. இதற்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 




 






“அனைவருக்கும் நன்றி…”


“எங்க ஆரம்பிக்கிறது..” என தனது வீடியோ பதிவை ஆரம்பத்த அவர், “தேங்க்ஸ், தன்னியவாதலு, நன்னி, சுக்ரியா, நன்றி..” என தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அத்தனை திரையுலக ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். பின்னர், “பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த வரவேற்பும் ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான ஃபீட் பேக் அனைத்திற்கும் ரொம்ப தேங்க்ஸ்” என தனது நன்றியினை தொடர்ந்தார்.


 






“நான் நடிக்கும் படங்களின் கதாப்பாத்திரங்களை, என்னுடைய படம், என்னுடைய கதாப்பாத்திரம் என கொண்டாடுவதுண்டு. ஆனால், பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் அவர்களுடைய படமாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் அந்த வீடியோ பதிவில் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த இயக்குனர் மணிரத்னமிற்கும், படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். 


மேலும் படிக்க : PS Box Office Collection: பொன்னியின் செல்வனின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பனிங் கலெக்‌ஷன்ஸ்..!