கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அந்த சிறுமி தனியாக இருக்கும்போது எல்லாம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில் சிறுமையின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதால் அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது திருமுருகன் தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையை கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.




இதுகுறித்து சிறுமியின் தாய் கடந்த 8.7.2021 அன்று குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில், 3 பிரிவுகளின் கீழ் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து திருமுருகனை குளித்தலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அந்த சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை எடுத்து 23.7.2021 அன்று கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தபோது அங்கு அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.


இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி நசீமா பானு தீர்ப்பு வழங்கினார். அதில், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனையும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. 




மேலும் அனைத்து தண்டனைகளையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். ஏக காலத்தில் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் திருமுருகன் அதிகபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.




கரூர் அருகே டிப்பர் லாரி மோதி கோர விபத்து.


சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மருமகன், மாமியார் உடல் நசுங்கி பலி. கரூர் மாவட்டம், கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில்  வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.




இந்நிலையில் நேற்று பாலவிடுதியில் உள்ள உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக வழக்கறிஞர் கனகராஜ் மற்றும் அவரது மாமியார் சுசிலா ஆகியோர் இருசக்கரவாகனத்தில்  சென்று விட்டு, இரவு வீடு திரும்பியபோது வெள்ளியணை அருகே வந்து கொண்டிருந்தபோது கிரானைட் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் லாரியின் சக்கரத்தில் இருவரும் மாட்டிக்கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 




உயிரிழந்த கனகராஜ் மற்றும் சுசிலா ஆகியோரின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.