Tamil Movie Update: எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அப்பா-மகன் - சியான் 60 அப்டேட்!

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை வரும் 20-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரம் அளித்தாலும் அதற்காக தன்னை மிகவும் வருத்தி நடிக்கக்கூடிய நடிகர் என்பதால், விக்ரமிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

Continues below advertisement

இவர், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் ஆதித்ய வர்மா என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருகின்றனர். கேங்ஸ்டர் படத்தின் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. துருவ் விக்ரம் நடிக்கும் காட்சிகள் நிறைவு பெற்ற நிலையில், விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியது இருந்தது. தற்போது, விக்ரம் நடிக்க வேண்டிய காட்சிகளும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து, இந்த படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையும் வரும் 20-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில், பின்னால் மதுபாட்டில்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, பணக்கட்டுகள் மற்றும் தங்ககட்டிகளுக்கு நடுவில் பணம் பறந்த நிலையில் விக்ரம் மிகவும் ஸ்டைலாக புகைபிடித்துக்கொண்டிருப்பது போல உள்ளது. இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லலித்குமார் தயாரித்துள்ளார். விக்ரமின் கோப்ரா படத்தையும் லலித்குமார்தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் நடித்து கடைசியாக கடாரம் கொண்டான் படம் வெளியானது. விக்ரமின் படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகிவிட்டதால், தற்போது அவரது இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், துருவ் விக்ரமிற்கும் இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola