Kareena Kapoor: 'எனது மகன்கள் நடிகர்கள் ஆவதை விரும்பவில்லை' - கரினா கபூர் பேட்டி

தனது மகன்கள் இருவரும் திரைப்பட நடிகர்களாக வருவதை தான் விரும்பவில்லை என்று பிரபல இந்தி நடிகை கரினா கபூர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை கரினா கபூர். அவரது கணவர் சயிப் அலி கானும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். கரினா கபூர்-சயிப் அலிகான் தம்பதியினருக்கு தைமூர் மற்றும் ஜஹாங்கிர்  என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு பிறந்த தைமூருக்கு தற்போது வயது 6 ஆகிறது. இரண்டாவதாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜஹாங்கிர் அலிகான் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Continues below advertisement

இந்த நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு நடிகை கரினா கபூர் தனது குழந்தைகள் பற்றி பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, தைமூர் நடவடிக்கைகள் சயிப் அலிகானைப் போலவே இருக்கிறது. ஜஹாங்கீர் எங்கள் இருவரையும் போலவே உள்ளான். தைமூர் மிகவும் சாமர்த்தியமான குழந்தை. அவனுக்கு படம் வரைதல், ஓவியம், வண்ணங்கள் மிகவும் பிடிக்கும். அவனுக்கு தன்னை வெளிக்காட்டுவது மிகவும் பிடிக்கும்.  அதை எப்படி வெளிக்காட்டுவது என்பதும் அவனுக்கு தெரியும். ஜஹாங்கீர் எப்படி வளர்கிறான் என்பதை பார்ப்போம்.  நான் அமீர்கானுடன் ஒரு படத்தில் காதல் காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது ஜஹாங்கிர் எனது வயிற்றில் இருந்தான். அப்போது நான் 5 மாதம் கர்ப்பிணியாக இருந்தேன்.  


நான் எனது இரு மகன்களையும் ஒரு ஜென்டில்மேனாக வளர்க்கவே விரும்புகிறேன். மக்கள் எனது மகன்களை நான் நல்ல முறையில் வளர்த்திருக்கிறேன் என்று சொல்லவே விரும்புகிறேன். மேலும், அவர்கள் நல்லவர்களாக, இரக்க குணம் உள்ளவர்களாக வளர வேண்டும். நான் எனது பணியை சிறப்பாக செய்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

எனது மகன்கள் திரைப்பட நட்சத்திரங்களாக வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தைமூர் என்னிடம் வந்து நான் ஏதாவது ஒன்று செய்கிறேன் என்று சொன்னால், எனக்கு மகிழ்ச்சி. அது அவனுடைய விருப்பம். நான் எனது மகன்களுக்கு உறுதுணையாக நிற்பேன். நான் ஒரு கடினமான தாயாக இருக்க விரும்பவில்லை. எனது மகன்கள் கீழே விழுந்து எழுந்து நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். இதைத்தான் எனது தாய் எனக்கு எனது தாயார் கற்றுக்கொடுத்தார்.


உனக்கு என்ன தேவையோ அதை செய், பின்னர் உனது தவறுகளை சரிசெய்து கொள் என்று எனது தாய் கற்றுக்கொடுத்துள்ளார். அந்த வழியில் எனது மகன்களுக்கு நான் தாயாக இருப்பேன். ஜஹாங்கீர் சிறுகுழந்தை. ஆனால், தைமூர் இப்போது அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறான். சயிப் அலிகான் எனது புகைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது தொடர்ந்து கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

நடிகை கரினா கபூருக்கு தற்போது 40 வயதாகிறது. கடந்த 2000ம் ஆண்டு முதல் பாலிவுட் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், அமீர்கான், சல்மான்கான், அக்‌ஷய்குமார் என்று பல்வேறு நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு சயிப் அலிகானை அவர் திருமணம் செய்து கொண்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola