தான் கர்ப்பமானதை ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பிரபல பாடகி சின்மயி பதிலளித்துள்ளார். 


மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமான சின்மயி  தொடர்ந்து, பிரபல நடிகர்களின் படத்தில் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் 'மாஸ்கோவின் காவிரி’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் ராகுல் ரவீந்தரை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து மீ டு எனப்படும்  பாலியல் தொடர்பான புகாரைத் தெரிவித்து திரையுலகைப் பரபரப்புக்குள்ளாக்கினார். 


கடந்த 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சிக்காக சென்ற போது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சின்மயி தெரிவித்திருந்தார். தொடர்ந்து திரைப் பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறைகளிலும் பெண்களிடம் அத்துமீறும் ஆண்களுக்கு எதிராக சின்மயி குரல் எழுப்பியும் கண்டித்தும் வருகிறார். இதனிடையே ராகுல் ரவீந்தர் - சின்மயி தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்தது. 






ஆனால் தான் கர்ப்பமான தகவலை கூட சின்மயி சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கவில்லை. ஆனாலும் குழந்தை பிறந்ததற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே தான் கர்ப்பமானதை ஏன் சொல்லவில்லை என்ற கேள்விக்கு பிரபல பாடகி சின்மயி பதிலளித்துள்ளார்.  அவருக்கு வாழ்த்து தெரிவித்த சிலர் மீ டு வில் அவர் புகாரளித்த பிரபல பாடலாசிரியரை குறிப்பிட்டு கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தனர். 






”நான் கர்ப்பம் பற்றி சமூக ஊடகங்களில் பேசாததற்கு இதுதான் காரணம். தமிழ்நாட்டின் குறிப்பாக சமூக ஊடகங்களில் இந்த சாக்கடை குப்பைகள்தான் உரத்த குரல். நம் குழந்தைகள் அத்தகைய பெரியவர்களைச் சுற்றி இருப்பார்கள். கவனமாகவும் கவனமாகவும் இருங்கள். இங்கு பெண்கள் பாதுகாப்பு என்பது கேலிக்கூத்தாக உள்ளது” என ட்விட்டரில் பதிலளித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண