Chinmayi METOO : என்னை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள்...சின்மயி குற்றச்சாட்டு
பெண்களுக்கு எங்கு தான் பிரச்சனைகள் இல்லை. அதிலும் சினிமா வட்டாரம் என்றால் அதை சொல்லவா வேண்டும். பெண்களுக்கு நடக்கும் அநியாயங்களை மறைத்தது அந்த காலம். ஆனால் இன்றய பெணகள் மிகவும் துணிச்சலாக தங்களுக்கு நடக்கும் அநீதிகளை வெளிப்படையாக தோலுரித்து காட்ட தயங்குவதில்லை. அதில் மிகவும் பரபரப்பாகவும் பெரிதாகவும் பேசப்பட்டது பாடகி சின்மயி - வைரமுத்து விஷயம்.
METOO மூலம் போராடிய சின்மயி:
கவிஞர் வைரமுத்து மீது ஒரு குற்றச்சாட்டை பாடகி சின்மயி 2018ம் ஆண்டு முன்வைத்து அவர் மீது போலீஸில் புகாரும் அளித்தார். அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பது அவரின் புகார். இதை நம்ப யாரும் தயாராகயில்லை என்றாலும் தொடர்ந்து தனது போராட்டத்தை நிறுத்தாமல் METOO அமைப்பின் மூலம் விடாபிடியாக போராடினர் சின்மயி. ஆனால் கால போக்கில் அதை பற்றின பேச்சுக்களை அடங்கி போய்விட்டன.
ஆடியோ ஆதாரம் உள்ளது:
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சின்மயி அந்த விஷயத்தை ஓபன் செய்துள்ளார். சின்மயி கூறுகையில் "என்னிடம் வீடியோ ஆதாரம் கேட்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் என்னால் எதுவும் செய்ய முடியாமல் பதட்டத்தில் இருந்தேன். அவர் கட்டிபிடித்ததில் ஒரு தவறான எண்ணம் இருக்கிறது என்று எனக்கு தோன்றியதால் நான் உடனடியாக அழுதுகொண்டே வெளியில் ஓடி வந்துவிட்டேன்".
துணிச்சலுடன் சின்மயி :
ஆனால் அதற்கு பிறகு ஒரு இயக்குனர் சமாதானம் பேசுவதற்காக என்னை போன் மூலம் தொடர்பு கொண்டார். அந்த ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இதை நிரூபித்து வைரமுத்துவின் உண்மையான உருவத்தை நிரூபிக்க என்னால் முடியும். இதனால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கு ஏதாவது நேர்ந்தாலும் எனது நண்பர்கள் மூலம் ஆடியோ பதிவு வெளியிடப்படும் என்றுள்ளார் சின்மயி. அவருக்கு இருக்கும் செல்வாக்கு அரசியல் பலம் இவற்றால் என்னால் இத்தனை நாட்கள் வெளிப்படையாக பேச இயலாமல் இருந்தது. ஆனால் இனி நான் இந்த விஷயத்தை விட போவதில்லை. எதையும் துணிந்து எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு வந்து விட்டது என்றுள்ளார் பாடகி சின்மயி.