Anikha Surendran debut film as Heroine : என்ன குட்டி பொண்ணு அனிகாவா இது அன்று ஆச்சரியத்தில் ரசிகர்கள்... ஹீரோயினாக களம் இறங்குகிறார் 


பிரபலமான குழந்தை நட்சத்திரங்களாக இருந்து ஹீரோயின்களாக ஆன பல நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் நாம் பார்த்ததுண்டு. அந்த வகையில் மற்றுமொரு குழந்தை நட்சத்திரம் இன்றும் நெடு நெடுவென வளர்ந்து ஹீரோயினாக மாறியுள்ளார். 


 



 


நம்ம அனிகாவா இவ்ளோ வளந்துட்டாங்க?


ஆம் அது " கண்ணான கண்ணே..." பாடல் மூலம் நமது இதயங்களை கசிய வைத்த அந்த சிறுமி அனிகா சுரேந்திரன் தான் அது. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான " பாஸ்கர் தி ராஸ்கல்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிகா. 






"ஓ மை டார்லிங்" மூலம் ஹீரோயினாக அறிமுகம்:


இயக்குனர் ஆல்ஃபிரட் டி. சாமுவேல் இயக்கத்தில் "ஓ மை டார்லிங்" எனும் மலையாள படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் அனிகா. ஆஷ் ட்ரீ வென்ச்சர்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீகாந்தா இப்படத்தை தயாரிக்க, ஜினேஷ் கே ஜாய் திரைக்கதை எழுதியுள்ளார். 


படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது :


ஆகஸ்ட் 17ம் தேதியன்று "ஓ மை டார்லிங்" படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் கும்பலத்தில் ஒரு பாரம்பரியமான பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த பூஜை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் முகேஷ், விஜயராகவன், லீனா, ஜானி ஆண்டனி, மஞ்சு பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த படத்தில் இளம் நடிகர்களான மெல்வின் ஜி. பாபு, ஸ்ரீகாந்த் முரளி, நந்து, ஷியாம்பிரசாத், டெய்ன் டேவிஸ், ஃபுக்ரு, ரிது, சோஹன் சீனுலால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். படத்திற்கு இசையமைக்கவுள்ளார் ஷான் ரெஹ்மான். 






குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்:


2010ம் ஆண்டு "கதா துடாருன்னு பேபி அனிகைன்" எனும் மலையாள  திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 5 சுந்தரிகள் படத்திற்காக சிறந்த குழந்தை நடிகருக்கான 2013 கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றார். நம் தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" மற்றும் "விஸ்வாசம்" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாக எப்படி மக்கள் மனதில் நிலைத்தாரோ அதே போல் ஒரு கதாநாயகியாகவும் தனது சிறப்பான நடிப்பால் பல உயரங்களை எட்ட வாழ்த்துக்கள்.