அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பத்தை மையமாக வைத்து பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளன என்றாலும் குடும்ப கதை என்றவுடன் நம் நினைவுகளில் உடனே வருவது "பாண்டவர் பூமி" குடும்பம் தான். அந்த அளவிற்கு இப்படம் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் சேரன் இயக்கிய பாண்டவர் பூவி திரைப்படம் வெளியாகி 22 வருடங்கள்  நிறைவாகி இருக்கிறது.


பாண்டவர் பூமி


இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான ஐந்தாவது திரைப்படம் "பாண்டவர் பூமி". அவரின் திரை வாழ்விற்கும் படத்தின் பெயருக்கும் என்ன ஒரு பொருத்தம். 5 வது படம் என்பதால் 'பாண்டவர் பூமி'. ராஜ்கிரண், அருண் விஜய், ரஞ்சித், ஷமிதா, விஜயகுமார், சார்லி, மனோரமா, வினுசக்கரவர்த்தி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். அண்ணன் - தங்கை பாசத்துக்கு எடுத்துக்காட்டாக உருவான மற்றுமொரு திரைப்படம் இது. 


தனது பூர்வீக நிலத்தில் புதிதாக ஒரு வீடுகட்டத் தீர்மானிக்கிறார் தனசேகரன் (ராஜ்கிரன்). இந்த வீடு கட்டும் பணிகளுக்கு இஞ்சினியராக வருகிறார் தமிழரசன் தனசேகரனின் தங்கையின் மகளான ஜீவாவின் மேல் காதல்வயப் பட்டு அவரிடம் தனது காதலைத் தெரிக்கிறார் தமிழ். ஆனால் ஜீவா தனது தாய் மாமன் தனபாலை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறி தமிழரசனின் காதலை  நிராகரிக்கிறார். இதனைத் தெரிந்து கொண்ட தனசேகரன். தங்கள் குடும்ப பின்னணியை தமிழரசனுக்கு எடுத்துச் சொல்கிறார். தங்களது குடும்ப பகையாளியின் மகனை தனது சகோதரி காதலித்து திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் அவர்களை கொன்றுவிட்டு குற்றவுணர்ச்சியில் சிறைக்குச் செல்கிறார் தனபால். 12 ஆண்டுகள்  தனது வாழ்க்கையை சிறையில் கழிக்கும் தனபாலுக்கு தனது தங்கையின் மகளான ஜீவாவை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார் தனபால். இதனை மதித்து தமிழரசன் தனது காதலை விட்டு செல்கிறார். கடந்த காலத்தில் தங்களது தங்கைக்கு செய்த அதே அநீதியை மீண்டும் ஒருமுறை செய்யாமல் தமிழரசன் மற்றும் ஜீவாவை சேர்த்து வைக்கிறார் தனபால்.


சேரனின் கதைக்களங்கள் பெரும்பாலும் சமூகம் கற்பிக்கும் நியதிகளுக்கு கட்டுப்பட்ட சூழலில் அமைக்கப் படுகின்றன. இந்த கதைகளில் கதாபாத்திரங்கள் பலரும் அதே சமூக நியதிகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அப்படியான வரம்பிற்குள் இருந்து அந்த கதாபாத்திரங்கள் அடையும் மனமாற்றத்தையே பாண்டவர் பூமி படத்தில் உணர்வுப்பூர்வமாக படமாக்கியுள்ளார்.