அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான வலிமை திரைப்படம் கடந்த வாரம் வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. அஜித்திற்கே உண்டான, மாஸ் ஓபனிங்கோடு வெளியான படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.






 


இந்த நிலையில் படம் வெளியான நாளன்று சென்னை ரோகினி தியேட்டரில், அஜித் ரசிகர்கள் சிலர், ரகளையில் ஈடுபட்டு தியேட்டர் கண்ணாடிகள், சீட் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியாக  புகார் எழுந்தது.




இந்தப்புகார் குறித்து, ரோகினி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். அதில், “ நிச்சயமா, அது ஒரு ப்ரஷ்ஷரான சூழல்தான். அதுகேத்த மாதிரி பாதுகாப்புக்காக ஆட்களை ரெடி பண்ணி வச்சிருந்தோம். இந்த மாதிரி சம்பவம் இதுக்கு முன்னாடி நடந்ததே இல்ல. இந்த தடவை டிக்கெட் வாங்காதவங்க  தியேட்டருக்குள்ள வர முயற்சி பண்ணாங்க..




அப்பத்தான் கண்ணாடி உடைப்பட்ட சம்பவம்  நடந்துச்சு. சிசிடிவியில எல்லாத்தையும் நான் பாத்துக்கிட்டுதான் இருந்தோம். அதே மாதிரி சீட்டையும் டேமேஜ் பண்ணிருந்தாங்க.. அடுத்த தடவை இந்த மாதிரி நடந்தா நிச்சயமா நடவடிக்கை தீவிரமா இருக்கும். படம் கலெக்ட் பண்ண லாபத்துல ஒரு பெரிய தொகை டேமேஜூக்கு செலவாயிடுச்சு. இதுக்கு முன்னாடி பேட்ட ரிலீசான டைம்ல தியேட்டர் ஸ்கீரினையே கிழிச்சிட்டாங்க.


பீஸ்ட்க்கு என்ன ப்ளான் 


பீஸ்ட் ரிலிசுக்கு நிறைய ப்ளான்ஸ் வைச்சிருக்கோம். நிச்சயமா ரிலீசுக்கு முன்னாடி, 3 செலிபிரேஷனுக்கு ப்ளான் பண்ணிருக்கோம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண