CIFF  எனப்படும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கவுள்ள நிலையில் என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது என்ற விவரங்களை காணலாம். 

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2003 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்நிகழ்வில் பல்வேறு மொழிகளை சேர்ந்த சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று (டிசம்பர் 15) தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைக்கிறார். சென்னை சத்யம் சினிமாஸில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் என மொத்தம் 5 ஸ்க்ரீன்களில் நாள் ஒன்று 4 காட்சிகள் வீதம் 20 படங்கள் திரையிடப்படுகிறது. மேலும் அரசு திரைப்பட கல்லூரி மாணவர்களின் 9 குறும்படங்களும் இதில் இடம் பெறுகின்றன. 

சிறந்த படம்,  இரண்டாவது சிறந்த படம், நடுவர்களின் சிறப்பு விருது, சிறந்த நடிகர்,நடிகை, ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ஒலிப்பதிவாளர் ஆகிய விருதுகளோடு அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது திரையுலகில் சிறந்து விளங்கும் ஒருவருக்கும் வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

இந்த திரைப்பட விழாவை காண மாணவர்கள், திரைப்பட துறையினர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பொதுமக்களுக்கு ரூ.1000 டிக்கெட் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது? 

Screen காலை நண்பகல் மதியம் மாலை
Santham (sathyam cinemas)

 தி ஹோட்டல் (2022)

(world cinema) 

ஃபிஸ்போன்

(world cinema) 

நோ பிரியர் அப்பாயின்மென்ட்

(world cinema) 

ட்ராயாங்கிள் ஆஃப் சட்னெஸ் 

(world cinema)

Serene (sathyam cinemas)

ஆட்டோபையோகிராஃபி

(world cinema) 

மெடிடெரென்னன் ஃபீவர்

(world cinema) 

குயின்ஸ் 

(world cinema) 

 
Seasons (sathyam cinemas)

ஹார்ட் ஷெல், சாஃப்ட் ஷெல் 

(world cinema) 

ஹார்கிஸ் 

(world cinema) 

பலோமா 

(world cinema) 

 
6 Degree (sathyam cinemas)

பியான்ட் தி வால் 

(world cinema) 

நேச்சுரல் லெஃப்டி

(world cinema) 

அன்

(world cinema) 

 
Anna theatre 

ரொமான்டிஸ்சம் ஆஃப் எமத் & டூபா

(world cinema) 

சேஃப் பிளேஸ்

(world cinema) 

ஐடி 

(world cinema) 

 

படங்கள் திரையிடப்படும் நேரங்கள்

ஒவ்வொரு தியேட்டரிலும் காலை 10, 10.15, 12.15, 12.30, 12.45, 1 மணி ஆகிய நேரங்களிலும், இதேபோல் 2.30, 3, 3.30, 4.30, 4.45, 5, 6.30, 7, 7.15 ஆகிய நேரங்களிலும் படங்கள் திரையிடப்படுவதால் சரியான நேரங்களை கண்டறிந்து உங்கள் பேவரைட் படங்களை கண்டு மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.