Chennai International Film Festival: 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர்தொழில், செம்பி, விடுதலை பாகம்1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. 

 

சர்வதேச திரைப்பட விழா:


 

ஒவ்வொரு ஆண்டும், இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் அமைப்பு சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான கேன்ஸ் விருது வென்ற ‘அனாடமி ஆஃப் எ ஃபோல்’ என்ற திரைப்படம் திரைப்பட உள்ளது. 

 

தமிழ் படங்கள்:


 

விழாவில் 12 தமிழ் திரைப்படங்கள், 8 ஈரானியப் படங்கள், 5 கொரியப் படங்கள் திரையிடப்பட உள்ளன. தமிழில் மட்டும் அண்மையில் வெளிவந்த வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், செந்தில் பரமசிவம் இயக்கத்தில் போர் தொழில், விக்ரம் சுகுமாறனின் ராவண கோட்டம், அனிலின் சாயாவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால், வெற்றிமாறனின் விடுதலை பாகம்1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 உள்ளிட்ட படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன. 

 

இதில் மாமன்னன், போர்தொழில், அநீதி, செம்பி, விடுதலை பாகம் 1 உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளிலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மாமன்னன், போர்தொழில் படங்கள் வசூலில் சாதனை படைத்த படங்களாக உள்ளன. 

 


இதேபோன்று சர்வதேச அளவில் ஆக்ட் நேச்சுரல், பாலகம், டிரீமி, ஃபுட் பிரிண்ட்ஸ் ஆன் வாட்டர், ஃப்ரீடம், லெட்டர் டொ ஹெல்கா, மனஸ் தி மைண்ட், மை டாட்டர் மை லவ், தி பிசினச் ஆஃப் பிளஷர், தி சேஃப், திபெத்தியன் ஹார்ட்ஸ், வைல்டிங் கண்ட்ரி உள்ளிட்ட படங்கள் சர்வதேச பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளன.