பேட் கேர்ல்


இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யப் இணைந்து தயாரித்துள்ள படம் பேட் கேர்ல். வெற்றிமாறனி உதவி இயக்குநர் வர்ஷா பரத் இந்த படத்தை இயக்கியுள்ளார். அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹிருது ஹாரூன், டீஜே அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அமித் த்ரிவேதி இசையமைத்துள்ளார். 


பேட் கேர்ல் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒரு குறிபிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக காட்டப்பட்டிருப்பதும் மது அருந்துவது , கேசுவல் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற காட்சிகள் டீசரில் இடம்பெற்றதால் இந்த டீசருக்கும் படத்திற்கும் குறிப்பிட்ட சாராரிடம் இருந்து  கடுமையான எதிர்ப்புகள் வந்தன. திரைத்துறையைச் சேர்ந்த மோகன் ஜி இந்த டிரைலரையும் வெற்றிமாறன் , பா ரஞ்சித் ஆகியோ விமர்சித்து பதிவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது


ரோட்டர்டாமில் விருது


விமர்சனங்கள் ஒரு பக்கம் இருக்க நெதர்லாந்தில் நடக்கு சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு தேர்வானது பேட் கேர்ல். சர்வதேச ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்று  இந்த விழாவில் நெட்பாக் விருது இந்த படத்திற்கு வழங்கப்பட்டது. கூடிய விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 


தணிக்கை சான்று வழங்கக்கூடாது


பேட் கேர்ல் படம் பிராமண பெண்ணை கொச்சைப்படுத்துவதாகவும் அதனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக் கூடாது என சென்சார் வாரியத்திற்கு உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஷ்ட்ரிய சேவா சங் தலைவர் ராம்நாத் இந்த வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. தணிக்கை வாரியம் தரப்பில் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜரானார். பேட் கேர்ல் படத்திற்கு தணிக்கை சான்று இன்னும் படக்குழு தரப்பில் இருந்து வின்னப்பிக்கவில்லை என்றும் அதனால் இந்த மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க முடியாது என்றும் கூறினார். மேலும் மனுதாரரின் கோரிக்கை தணிக்கை வாரியம் சட்டப்படி பரிசலீக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.