SV Sekar:நடிகர் எஸ்.வி.சேகர் மந்தவெளியில் உள்ள தனது வீட்டின் முன்பு தேங்கி இருந்த சேரும், சகதிகளை அப்புறப்படுத்தி சுத்தம் செய்யும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். 

 

மிக்ஜாம் புயல்:


மிக்ஜாம் புயலால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. 4 மற்றும் 5ம் தேதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. வடசென்னையில் இன்னும் தண்ணீர் வடியாத நிலையில் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடியிருப்புகள், சாலைகள் மற்ரும் அலுவலகங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கினர். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை விட்டு 3 நாட்களை கடந்த போதிலும் சில இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. 

 

பால், உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் தவித்த மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். திரை பிரபலங்களும் மழை வெள்ளத்தில் சிக்கிய வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது குடியிருப்பு பகுதியை தூய்மைப்படுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். டிவிட்டர் பதிவில் அவர் பகிர்ந்த வீடியோவில் மந்தவெளியில் உள்ள தனது வீட்டின் அருகே வெள்ளநீர் வடிந்த பிறகு சேரும், சகதியும் சாலையில் திரண்டுள்ளது. 

 

எஸ்.வி.சேகர் வீடியோ:


 

அதை எஸ்வி சேகர் அப்புறப்படுத்தி சுத்தம் செய்ததுடன், என்னால் முடிந்த வரை என் வீட்டு வாசலில் உள்ள குப்பைகளை அகற்றுவதாகவும், புயல் வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் என அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துகளையும் கூறிக் கொண்டார். 

 





 

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை கொடுத்து உதவினார். விஜய் டிவி நடிகர் பாலா 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து ரூ.10 லட்சத்தை நிவாரண நிதிக்கு கொடுத்தனர். நடிகர் ஹரீஷ் கல்யாண் ரூ. 1 லட்சத்தை நிவாரண நிதிக்கு கொடுத்து உதவினார். விஜய் தனது ரசிகர்களை உதவி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். நடிகர் அஜித்குமார், தனது நண்பர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.