பாக்கியலட்சுமி சீரியலில் செழியன், ஜெனியை விவாகரத்து செய்வதாகக் கூறியதைக்கேட்டதும், ஆத்திரத்தில் செழியனைப்  பளார்னு அடிப்பதைப்பார்த்த கோபி அதிர்ந்துபோய் உள்ளார். மகனுக்கே இந்த நிலைமைன்னா, நமக்கு சொல்லவா வேண்டும் என்ற அச்சத்தில் இருக்கிறார் கோபி.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகளோடு வாழும் குடும்பத்தலைவி பாக்யலெட்சுமி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சுய தொழில் செய்கிறார்.


எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் பாக்யலெட்சுமிக்கு  தனது வாழ்வில் பெரும் சோதனைதான் தற்போது ஏற்பட்டுவருகிறது. பாக்யலெட்சுமியின் கணவரான கோபி, தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுகிறார்.



இதற்காக பாக்யலட்சுமியை ஏமாற்றி நீதிமன்றம் வரை அழைத்து வருகிறார். ஆனால் இதுவரை விவாகரத்து வழக்கு தொடர்கதையாகவே இருந்துவருகிறது. ஆனால் தந்தை ஏதோ தவறு செய்கிறார் என அறிந்து கொள்ளும் எழில், கோபியைக் கண்டித்து அப்படியே விட்டுவிடுகிறார். இதன்பிறகு கோபியின் தந்தை ராமமூர்த்திக்கும் இந்த விஷயம் தெரிந்ததும் சண்டையிடுகிறார். என்ன நடந்தாலும் இதுவரை கோபி மாட்டிக்கொள்ளாமல் கதைக்களம் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.


ஆனாலும் கடந்த 2 நாள்களாக கோபி மீது சந்தேகம் கொள்கிறார் பாக்யலட்சுமி.  இந்த நிலையில்தான், செழியன், விவாகரத்து செய்வதாக கூறும்போது, அதைக்கேட்டு கோபப்படும் பாக்யா, செழியனை கன்னத்தில் ஓங்கி அறைவிடுகிறார். மேலும் “விவாகரத்து செய்வதற்கு தான் கல்யாணம் செய்தியா? இப்படி பாதியிலேயே விட்டு போவேன் என்று சொல்ல உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்று செழியனிடம்  கேள்வி கேட்கிறார்.


 



இப்படி இதுவரை கோபப்பட்டு பாக்யாவைப் பார்த்ததே இல்லையே என்று எண்ணும் கோபி முகமெல்லாம் வியர்த்துவிடுகிறது. செழியனுக்கே இந்த நிலைமை என்றால், நாம  விவாகரத்து செய்ய போறது மட்டும் பாக்யாவுக்கு தெரிஞ்சா.. அய்யோ நினைச்சே பார்க்கமுடியவில்லை என்ற அதிர்ச்சியுள்ளார் கோபி. இந்த ப்ரோமாவைப் பார்த்த ரசிகர்கள், ” Gopi mind voice: நம்ம divorce matter a phone la தான் பாக்கியா கிட்ட சொல்லணும் நேரா சொன்னா கண்ணுக்குள்ள விரல வுட்டு நோண்டிடுவா போல, ம்ம புள்ளைகே இந்த அடினா நமக்கு தெரு நாய விட அதிகமா விழுமே” என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை சோசஷியல் மீடியாவில் பகிர்ந்துவருகின்றனர்.