சந்திரமுகி 2 திரைப்படம் வரும் செப்டம்பர் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 


சந்திரமுகி 2:


சந்திரமுகி பட முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 17 வருடங்கள் கழித்து 'சந்திரமுகி 2' திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இப்படம்  பி.வாசு இயக்கத்தில் உருவாகிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடிக்கின்றனர்.


லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.


ரிலீஸ் எப்போது?


இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தின் புதிய அறிவிப்பை  இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தது. அதன்படி லைகா நிறுவனம் இன்று படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரமுகி 2 படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 






சந்திரமுகி முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றது. காமெடி, செண்டிமென், த்ரில்லர் என படம் மிகவும் சுவாரஸ்யமாக பயணிக்கும். குறிப்பாக வடிவேலுவின் காமெடிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது. கிளைமேக்ஸ் காட்சிகளில் நடிகை ஜோதிகா தனது மிரட்டலான நடிப்பால் ஸ்கோர் செய்திருந்தார். நடிகர்கள் ரஜினிகாந்த், நயந்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், மனோபாலா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்த நிலையில் அவர் அவர் தங்களின் சிறப்பான பங்களிப்பை படத்திற்கு கொடுத்திருந்தனர். இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்திரமுகி2 வெளியாகின்றது. இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க 


Udhayanidhi Stalin: ‘இதுவே திருப்தி; இனி வாய்ப்பில்லை ராஜா...’ - செய்தியாளர் கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கறார்....!


Mari Selvaraj: “இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயந்தேன்; உதய் சாருக்கு நன்றி” - இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி!