சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தன் கதாபாத்திரத்திற்கான டப்பிங்கை துவங்கியுள்ளார். இது குறித்து லைகா நிறுவனம் டிவிட்டர் பதிவில் : “வேட்டையன் ராஜா பராக் பராக்! ராகவா லாரன்ஸ் வேட்டையனாக மாறி இன்று முதல் சந்திரமுகி 2 படத்திற்கு டப்பிங் பேசுகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது!” என தெரிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் சென்னையில் 800 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை பி.வாசு தற்போது இயக்கி வருகிறார். அதில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் முதல் பாகத்தில் நடித்த நடிகர் வடிவேலு சந்திரமுகி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் லட்சுமிமேனன் கங்கனா ரனவத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. அதற்குப் பிறகு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் சில மாதங்களாக ஒரு சில காரணங்களால் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.
பின்னர் கடந்த மே மாதம் முதல் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கான இறுதி கட்டப்பட படிப்பை தொடங்கி நடைபெற்ற நிலையில், அதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்ளிட்டவர்கள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட தயாரிப்பு நிறுவனமான லைகா திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் அண்மையில் லைகா நிறுவனம் சந்திரமுகி 2 குறித்த முக்கிய அப்டேட்டை கொடுத்தது. அதன்படி சந்திரமுகி 2 வரும் விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகின்றது.
சந்திரமுகியின் முதல் பாகம் காமெடிக்கும் திரில்லருக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. இதனால் இது மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் சந்திரமுகி 2 மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது.