திருவனந்தபுரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை சந்திரா லட்சுமணன். அடிப்படையில் பரத நாட்டிய கலைஞரான இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘மனசெல்லாம்’ படத்தில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி உள்ளிட்ட பலப் படங்களில் நடித்தார். மலையாள படங்களிலும் சந்திரா நடித்துள்ளார்.
படங்களில் நடித்தாலும், தொலைக்காட்சி தொடர்தான் இவருக்குக்கான அடையாளத்தை பெற்றுத் தந்தது. குறிப்பாக ‘ஸ்வந்தம்’ தொடரில் சந்திரா நெல்லிகதன் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பெரிய அளவிலான பாராட்டை பெற்றார். இவருக்கு தற்போது திருமண வைபோகம் அரங்கேறி உள்ளது.
ஆம், இவருக்கும் ‘ஸ்வந்தம் ‘தொடரில் நடித்து வரும் டோஷ் கிறிஸ்டி காதல் மலர்ந்தது. இந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 10 ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தனது நிச்சயதார்த்த புகைபடத்தை சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவரின் ரசிகர்கள் எப்போது கல்யாணம் கேட்டு வந்தனர். அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது திருமண வீடியோ வெளியாகியுள்ளது.