டோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் நாக சைத்தன்யா. நாகர்ஜூனாவின் மகனான இவருக்கு ஏராளமான தெலுங்கு ரசிகர்கள் உள்ளனர். தற்போது பாலிவுட் சினிமாவிலும் கால் பதிக்க தொடங்கியுள்ளார் நாக சைத்தன்யா. சமீபத்தில் அமீர் கானுடன் இணைந்து லால் சிங் சந்தா என்னும் படத்தில் ‘பாலா’ என்னும் கதாபாத்திரத்தில் ரானுவ வீரராக நடித்திருந்தார்.சமீபத்தில் சாய் பல்லவியுடன் நாக சைத்தன்யா இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தாங் யூ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நாக சைத்தன்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் DJ வுமான BEN BOHMER உடன் சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பென் ஜெர்மனியை சேர்ந்த மிகப்பெரிய இசைக்கலைஞர்.பாடல் பாடுவது , டிரம்ஸ் வாசிப்பது, பியானோ வாசிப்பது, டிஜேவாக அசத்துவது என முழுக்க முழுக்க இசையில் ஊரியவர். 27 வயதாகும் பென் சமீபத்தில் லண்டலின் தனது லைவ் காண்செட்டை செய்திருந்தார். 






இந்த நிலையில் அவருடன் எடுத்த புகப்படத்தை பகிர்ந்த நாக சைத்தன்யா “ எனக்கு இது ஒரு ஃபேன் பாய் மொமண்ட்! ..என் வாழ்வில் பல வழிகளில் தன் இசையால் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த மனிதரை சந்தித்தேன்..என்னை இசையால் தொடர்ந்து வழி நடத்துவதற்கு நன்றி. அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்..தொடர்ந்து நீங்கள் பல முன்னேற்றங்களை காண வேண்டும் ..உங்கள் நேரலையை காண ஆர்வமாக உள்ளேன்..லாட்ஸ் ஆஃப் லவ் “ என குறிப்பிட்டு ரசிகருக்கேன் உரித்தான உற்ச்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார் நாக சைத்தன்யா. என்னதான் அவருக்கு டோலிவுட் பக்கம் ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் அவரை ஒரு ரசிகராக பார்ப்பதற்கு சற்று ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.







நாக சைத்தன்யாவும் சமந்தாவும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். தென்னிந்திய சினிமாவில் அதிக கவனம் பெற்ற இந்த காதல் ஜோடிகள் சில மாதங்களுக்கு முன்னதாக தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் நண்பர்கள் மற்றும் சினிமா துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, அதன் பிறகு சமந்தா வழக்கத்திற்கு மாறாக சமூக வலைத்தளில் செம ஆக்டிவாக தொடங்கிவிட்டார். நாக சைத்தன்யாவை ஒப்பிடுகையில் சமந்தா விவாகரத்திற்கு பிறகு சந்தித்த சவால்களும் சர்ச்சைகளும் ஏராளம். சமந்தாவும் சைத்தன்யாவும் விவாகரத்து செய்துக்கொண்டாலும் சமூக வலைத்தளங்களில் இருந்து இருவரும் எடுத்துக்கொண்ட சில புகைப்படத்தை நீக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.