இயக்குநர் வெற்றிமாறனின் உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள பேட் கேர்ள் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படமே வெற்றிமாறனின் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி' தயாரிக்கும் கடைசி படமாக இருக்கும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். பேட் கேர்ள் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆபாச வார்த்தைகளின் பட்டியல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெற்றிமாறனை மிஞ்சிய உதவி இயக்குநர்

பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானது முதல் இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இப்படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு  பாசிட்டிவான விமர்சனங்களையே வழங்கியுள்ளார்கள். இன்றைய தலைமுறை பெண்ணின் சமூக உளவியல் சிக்கல்களை பேட் கேர்ள் படம் பேசுகிறது என்றாலும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இப்படம் தவறாக சித்தரிக்கிறது என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. பேட் கேர்ள் படத்தின் டிசரை பகிர்ந்த விஜய் சேதுபதி மற்றும் சிலரின் குடும்பத்தினரை தாக்கி சமூக வலைதளத்தில் பதிவுகள் வெளியாகின. 

பேட் கேர்ள் படத்திற்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. 16 வயதை கடந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.  வெற்றிமாறன் படங்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம் பயண்படுத்தப்படுவது பொதுவான விமர்சனமாக வைக்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது பேட் கேர்ள் படத்திலும் நிறைய ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. படத்தை பார்வையிட்ட சென்சார் வாரியம் படத்தில் இருந்து நீக்க வேண்டிய  ஆபாச வார்த்தைகளை பட்டியலிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதில் குருவையே மிஞ்சிவிடார்  வெற்றிமாறனின் உதவி இயக்குநர் என பதிவிட்டு வருகிறார்கள்.