தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்த ஒரு  இணையவாசியை பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி கடுமையாக சாடியுள்ளார்.

Continues below advertisement

பொதுவாக சினிமா மற்றும் பிற துறை சார்ந்த பிரபலங்கள் குறித்து அவ்வப்போது அவதூறான கருத்துகள், அவர்களின் போட்டோவை கேலி செய்து பதிவிடுதல் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதிலும் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி இதுமாதிரியான கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்கு எதுவான இடமாகவும் உள்ளது. தங்களைப் பற்றி வரும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது சம்பந்தப்பட்ட பிரபலங்கள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. 

இப்படியான நிலையில் பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லியை சமூக வலைத்தளமான ட்விட்டரில் வெளிநாட்டு தணிக்கை வாரியத்தில் தன்னை உறுப்பினராக அடையாளப்படுத்திக் கொள்ளும் உமைர் சந்து என்பவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தனது பதிவில், நடிகை செலினா ஜெட்லி மட்டும் தான் பாலிவுட்டில் நடிகர் பெரோஸ் கான் மற்றும் அவரது மகன் ஃபர்தீன் கானுடன் நிறைய தடவை படுக்கையை பகிர்ந்து கொண்டார் என தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. பலரும் உமைர் சந்து கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

Continues below advertisement

இந்நிலையில் அவரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள செலினா,  சந்து  என்னைப் பற்றிய உங்களுடைய பதிவு உங்களின் பாலியல் சார்ந்த பிரச்சினைக்கு தீர்வளித்து குணப்படுத்தும் என்று நம்புகிறேன். அதேசமயம் உங்கள் பிரச்சனையை சரிசெய்ய வேறு வழிகள் உள்ளன. அதாவது மருத்துவரிடம் செல்வது, நீங்களே முயற்சி செய்வது போன்றவை மாதிரி” என தெரிவித்துள்ளதோடு ட்விட்டர் சேஃப் கணக்கையும் குறிப்பிட்டுள்ளார். 

யார் இந்த ஜெலினா ஜெட்லி? 

கடந்த 2001 ஆம் ஆண்டு  மிஸ் இந்தியா பட்டம் வென்ற  செலினா ஜெட்லி,  அதே ஆண்டில் மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்றார். ஆனால் அப்போட்டியில் 4வது இடம் பிடித்தார். தொடர்ந்து அவர் 2003ம் ஆண்டில் பாலிவுட்டில் ஜனாஷீன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து டாம் டிக் அண்ட் ஹாரி, அப்னா சப்னா மனி மனி, நோ என்ட்ரி மற்றும் கோல்மால் ரிட்டர்ன்ஸ் போன்ற பல இந்தி படங்களிலும் நடித்தார். 

இதனையடுத்து சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த செலினா ஜெட்லி மீண்டும்  2020 ஆம் ஆண்டு வெளியான சீசன்ஸ் க்ரீட்டிங்ஸ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.