Just In





Nayan - Vignesh Shivan Marriage : ட்விட்டரில் வாழ்த்து மழை; ஆசியில் நனையும் நயன்-சிவன்!
நயன்தாரா - விக்னேஷ்சிவன் திருமணத்திற்கு டுவிட்டரில் திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

இந்திய திரையுலகின் பிரபல நடிகையும், லேடி சூப்பர்ஸ்டாருமாகிய நயன்தாராவிற்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே இன்று மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை முன்னிட்டு டுவிட்டரில் இன்று வாழ்த்துகள் குவிகிறது.
மேலும், திரைபிரபலங்களும் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில், மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட மற்றும் மகிழ்ச்சியான மணவாழ்க்கையாக அமைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இனிய திருமண வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் இருவருக்கும் மிகுதியான அன்புடன் எப்போதும் வாழ ஆசிர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது டுவிட்டர் பக்கத்தில் திருமண வாழ்த்துக்கள். நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் சிறப்பானதற்கு தகுதியானவர். இனிமையான, அர்த்தமுள்ள, மகிழ்ச்சியான திருமண நாளாக அமைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பல பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்