நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடங்கி, அவரது ரசிகர்கள், நெட்டிசன்கள் என விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும் கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களது வாழ்த்துகளைப் பார்க்கலாம்.
லோகேஷ் கனகராஜ்
லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அன்னா, உங்களுடன் மீண்டும் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்
சஞ்ஜய் தத்
லியோ படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள பாலிவுட் நடிகர் சஞ்ஜ தத் ”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரர் விஜய். லியோ படம் வெளியாவதற்காக மிக ஆர்வமாக கத்திருக்கிறேன்” என தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு
விஜயின் அடுத்தப் படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபு ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா” என்று தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அபர்ணா தாஸ்
பீஸ்ட் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த மற்றும் டாடா படத்தில் கதாநாயகியான அபர்னா தாஸ் விஜய்யுடனான புகைபடத்தைப் பகிர்ந்து “ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சார். உங்களுடன் சேர்ந்து நடித்ததில் நான் பெருமையடைகிறேன் “ என தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஸ்டுடியோ கிரீன்
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் “தனது நேர்மைக்காகவும் எளிமையான குணத்திற்காகவும் அழகிற்காகவும் கொண்டாடப்படும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என ட்விட்டர் பக்கத்தில் குறியுள்ளது.
மஹத்
ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்த நடிகர் மஹத் விஜயுடன் தனது புகைபடங்களைப் பகிர்ந்துகொண்டு “என்றும் நான் உங்களது ரசிகன்“ என்று வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரேம்ஜி
பிரேம்ஜி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சூரி
நடிகர் சூரி “ பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே“ என்று தனது ஸ்டைலில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விக்ராந்த்
நடிகர் விக்ராந்த் தனது மூத்த அண்ணன் விஜயுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து "என் மூத்த சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கலையரசன்
மெட்ராஸ் , சார்பட்டா ஆகிய படங்களில் நடித்த நடிகர் கலையரசன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
ஜானி மாஸ்டர்
டான்ஸ் மாஸ்டர் ஜானி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்த்துக்களை கூறியுள்ளார்.
மேலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஆர்யா, ஜி.வி பிரகாஷ், ராகவா லாரன்ஸ் , நடிகை ராதிகா, ஆகியவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள். இன்றைய நாள் முழுதும் சமூக வலைதளங்கள் நடிகர் விஜயின் பெயரால் நிரம்பியிருக்கப்போகிறது.
நா ரெடி
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்ட படக்குழு இன்று மாலை 6 : 30 மணியளவில் லியோ படத்தின் முதல் பாடலாக ‘அல்டர் ஈகோ - நா ரெடி’ வெளியாக இருக்கிறது. பெரும் ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். .
ஃபர்ஸ்ட் லுக்
இத்தனை சர்ப்ரைஸ் போதாதென்று நள்ளிரவு பண்ணிரெண்டு மணியளவில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்றையும் வெளியிட்டது படக்குழு.
லியோ
இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் 2ஆவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.