தமிழ் சினிமாவில்தான் காஸ்டிங் கவுச் கம்மி... மனம் திறந்த ஓவியா

தமிழ் சினிமாவில் தான் காஸ்டிங் கவுச் கம்மி எனக் கூறியுள்ளார் நடிகை ஓவியா ஹெலன்.

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தான் காஸ்டிங் கவுச் கம்மி எனக் கூறியுள்ளார் நடிகை ஓவியா ஹெலன்.

Continues below advertisement

தமிழில் களவாணி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவருக்கான தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. எதையும் நேர்மையுடன்  , துணிச்சலுடன் , அன்புடன் அணுகும் ஓவியாவின் குணம் ரசிகர்களுக்கு பிடித்து போனது. ஓவியாவிற்குதான் முதன் முதலில் ’ஆர்மி’ என்ற ஒன்றை தொடங்கி ரசிகர்கள் ஆதரவு குரல் எழுப்பினர். ஓவியா தற்போது வெப் சீரிஸ், ஃபோட்டோ ஷூட், படங்கள் என கவனம் செலுத்து வந்தாலும், ட்விட்டரில் அவர் இடும் கருத்துகளும் அதிகமாக கவனிக்கப்படுகின்றன.

இந்நிலையில், நடிகை ஓவியா ஹெலன் ஓர் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவர் கூறியதாவது: என் ஃபேமிலி ரொம்பவும் சின்னது. நான், அப்பா, என் நாய்க்குட்டி. அவ்வளவுதான் என் குடும்பம். கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் நிறைய ஓய்வெடுத்தேன். நன்றாக சமைக்கக் கற்றுக் கொண்டேன். இப்போது, கொரோனா குறைந்த பின்னர் கொஞ்சம் ட்ராவல் பண்றேன். நான் ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணு. நான் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு விபத்து தான். எனக்கு நடிப்பு தவிர வேறேதும் தெரியாது. அதனால் எனக்கு வேறு தொழில் ஏதுமில்லை. 17 வயதில் இருந்து சம்பாதிக்கிறேன். நிறைய பணத்தைத் தொலைத்துள்ளேன். ஆனால் வாழ்க்கையில் பட்டுத்தானே பாடம் கற்க முடியும். ஒரு மிடில் க்ளாஸ் பொண்ணா எனக்கு பணத்தின் மதிப்பு தெரியும்.


பிக்பாஸ் மூலம் எனக்கு நிறைய பெயரும், புகழும் கிடைத்தது. ஆனால் அதெல்லாம் ஏன் பட வாய்ப்புகளாகவில்லை என்று கேட்டால் எனக்கு அதற்கான பதில் தெரியவில்லை. திரைக்குப் பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. எனக்கு எதிர்பார்ப்புகள் அதிகமில்லை. நான் காம்படிட்டிவ் பெர்சனாலிட்டி இல்லை. அதனால் நான் வாய்ப்புகளுக்காக போட்டாப்போட்டி போடுவதில்லை. வளைந்து கொடுப்பதும் இல்லை. என்னை நான் இழந்து வரும் வாய்ப்புகள் எனக்குத் தேவையில்லை. வாய்ப்புக்காக நான் என்னையே டார்ச்சர் செய்ய முடியாதல்லவா? இந்த உலகில் நம்மை விட்டுக்கொடுக்காமல் நாம் வாழ்வதே மிகவும் கடினமானது. அதனால் நான் எனக்கு உண்மையாக இருந்தால் போதும் என்றே நினைக்கிறேன். சினிமா துறை ஆணாதிக்கம் நிறைந்தது. சம்பள பாகுபாட்டிலேயே நீங்கள் அதைப் பார்க்கலாம். ஒரு பெண்ணுக்கு ரூ.10 லட்சமும், ஹீரோவுக்கு குறைந்தது ரூ.1 கோடியும் சம்பளமாகவும் தருகிறார்கள். நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என் அனுபவத்தில் தமிழ் சினிமாவில் தான் காஸ்டிங் கவுச் குறைவு என்பேன். 

எனக்கு என் அம்மா என்றால் ரொம்பப் பிடிக்கும். அவர் மறைவுக்குப் பின்னர் என்னிடம் அன்பு காட்டும் எல்லோரிடமும் என் தாயைப் பார்க்கிறேன். வாழ்க்கை யாருக்குமே அவ்வளவு ஈஸியானது இல்லை. அழுகையுடன் பிறக்கும் நாம் வாழ்நாள் முழுவதும் எதற்காகவாது போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும். வாழ்க்கையில் நாம் எப்படி சர்வைவ் பண்றோம் என்பதே முக்கியம். அந்த விஷயத்தில் நான் எப்போது என் உள்ளுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அது சொல்வதை நம்புவேன். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாத்துக்குமே காரணம் இருக்கிறது. அதுதான் கர்மா என நான் நம்புகிறேன். சினிமாவில் சிம்பு எனக்கு நல்ல நண்பர். அவர் அவ்வப்போது என்னை நலம் விசாரிப்பார். நான் அவரிடம் பேசி நாட்களாகிவிட்டன. விரைவில் பேச வேண்டும்.

இவ்வாறு ஓவியா ஹெலன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola