பார்வதி நாயர்


நிமிர்ந்து நில் , என்னைஅறிந்தால், உத்தமவில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். சமீபத்தில் வெளியான விஜயின் தி கோட் திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். இவர் தற்போது நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.  2022 ஆம் ஆண்டு தனது வீட்டியில் இருந்த செல்ஃபோன் , லேப்டாப் , கைகடிகாரம் உள்ளிட்ட 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக தனது வீட்டில் வேலை பார்த்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து சுபார் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 


பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு


மறுபக்கம் சுபாஷ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி நாயர் மற்றும் 7 பேர் தன்னை வீட்டில் அடைத்து  அடித்து துன்புறுத்தியதாக அவர்கள் மீது புகாரளித்திருந்தார். அவரது புகார் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷின் வழக்கை விசாரிக்க சென்னை காவல் துறையினருக்கு கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது தேனாம்பேட்டை காவல்துறையினர் பார்வதி நாயர் , அயலான் பட தயாரிப்பாளர் கொட்டப்பாடி ராஜேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது சுபாஷ் அளித்த புகாரின் விசாரணையை தொடங்கியுள்ளார்கள்.


சாதியை கேட்டு இழிவாக நடத்தினார்


இது பிரச்சனை குறித்து சுபாஷ் தனியா செய்தி நிறுவனத்திடன் பேசியுள்ளார் " கொரோனா காலத்தில் தான் கொட்டபாடி ராஜேஷ் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் அவர் கேட்டுக்கொண்டதால் பார்வதி நாயர் நடித்த ரூபம் படத்தில் பணியாற்றினேன். இரண்டு ஆண்டுகள் அவர் வீட்டில் நான் வேலை செய்தேன். அப்போது எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் அவரிடம் ஊருக்கு போகவேண்டும் என்று கேட்டேன். அப்போது நான் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் எந்த சாதியை சேர்ந்தவர் என்று பார்வதி நாயர் கேட்டார். நான் சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று நான் சொன்னதும் அவரது முகம் மாறியது . பின் என் சாதியை வைத்து என்னை இழிவாக பேசினார். அவர் பேசியதை நான் என் செல்ஃபோனில் ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டேன். இதை நான் வெளியே சொல்லிவிடுவேன் என்று அஞ்சிய பார்வதி நள்ளிரவு 1 மணிக்கு 7 நபர்கள் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.உயிர் பயத்தால் தான் நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். " என தெரிவித்துள்ளார்