நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்காந்த்க் தனது மகன் சண்முகபாண்டியனின் பிறந்தநாளை கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






நிஜ வாழ்கையிலும் சரி திரைவாழ்கையிலும் சரி இரண்டிலுமே கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜய்காந்த். திரைத்துறையில் இருக்கும் போது, துறை சார்ந்த பல பிரச்னைகளுக்கு முன் நின்று தீர்வு கண்டவர், தொடர்ந்து அரசியல் களத்திலும் களம் கண்டார். கடின உழைப்பாலும், சினிமாவின் பிரபலத்தாலும் அதிலும் வெற்றி கண்டவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளை பெற்று எதிர்கட்சியாக தலைவராக உயர்ந்தார். 


எதிர்கட்சிதலைவர்


அரசியல் களத்திலும் கம்பீர கேப்டனாக வலம் வந்த அவர் இடையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதற்காக பல்வேறு கட்ட சிகிச்சைகளை மேற்கொண்டு, பழைய நிலைக்கு திரும்ப முயன்றார். ஆனால் எந்த சிகிச்சையும் பலனிக்க வில்லை. இதனால் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வந்தது. இதனிடையே அவரது மனைவி பிரமேலதா பொறுப்பை ஏற்று  அரசியல் பணிகள் கவனித்து வந்தார். 


இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எதிர்பார்த்த இடங்கள் கிடைக்க வில்லை என்பதால் அக்கட்சி அமமுக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடிக்க, எதிர்கட்சியாக அதிமுக உருவெடுத்தது. தேமுதிக அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் தேமுதிகவிற்கு படுதோல்வியே  கிடைத்தது. இதனால் தேமுதிகவை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.