நடிகர் ஆர்யா நடிக்கும்  “கேப்டன்” படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Continues below advertisement


நாணயம், மிருதன், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக், டிக், டெடி ஆகிய வித்தியாசமான கதைகளை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். இவர் அடுத்ததாக நடிகர் ஆர்யா நடித்துள்ள கேப்டன் படத்தை இயக்கியுள்ளார். டெடி படத்துக்குப் பிறகு இந்த கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளதால் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன், ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் டி.இமான் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டூடியோஸ் தயாரித்த கேப்டன் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 






முதற்கட்டமாக இந்தப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து படத்தில் இருந்து ‘நினைவுகள்’ என்ற பாடலும் அதனைத்தொடர்ந்து  ‘கைலா’ என்ற பாடலும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில்  ‘கேப்டன்’ படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு  வெளியிடப்படும் என கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 


அதன்படி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தன் படங்களில் எப்போதும் வித்தியாசமாக ஏதேனும் ஒன்றை கையாளும் சக்தி சௌந்தர் ராஜன் இம்முறை ஏலியன்கள் உலகை பற்றி பேசியுள்ளார். ட்ரெய்லர் முழுக்க ஆர்யாவின் பின்னணி குரலில் காட்சிகள் நகர்வது போல அமைக்கப்பட்டுள்ளது. எதிரி யாராக இருந்தாலும் ஒவ்வொரு ராணுவ தாக்குதலுக்கு 4 ஸ்டேஜ்கள் இருக்கும் என கூறி கேப்டன் படத்தின் ட்ரெய்லருக்குள் நம்மை அழைத்து செல்கிறார் ஆர்யா..இதில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ளார்.






50 ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாத காட்டின் பின்னால் இருக்கும் மர்மங்களை கண்டறியும் குறித்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏலியன்கள் வாழ்கிறதா அல்லது ஏதேனும் ரகசியம் உள்ளதா என்ற காட்சிகள் மிகுந்த எதிர்பாப்பை ஏற்படுத்தியுள்ளது.நிச்சயம் இந்த படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.