ஆர்யாவின் நடிப்பில் உருவாகி  ‘கேப்டன்’ படம் வெளியாகியிருக்கும் நிலையில் வழக்கம் போல படத்தின் முதல் காட்சிக்கு ஆஜர் ஆகிவிட்டார் நடிகர் கூல் சுரேஷ். கேப்டன் படத்தை பற்றி அவர் சொன்னதை இங்கு பார்க்கலாம். 


நான் முதல்ல இந்தப்படத்த பார்க்குற  ஐடியாவிலேயே இல்ல. ஆனா ஆர்யாவோட ரசிகர்கள் எங்கிட்ட விஜய் அஜித், சூர்யாவோட படங்களுக்கெல்லாம் வர்றீங்க.. ஆர்யாவோட படத்துக்கு வரமாட்டீங்களான்னு கேட்டாங்க.. அவங்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலதான் நான் படத்துக்கு வந்தேன்.


ஆர்யா...  பாருயா.. உன்னோட ரசிகர்கள் பக்கா ஜோருயா... ராணுவ வீரர்கள் அப்படின்னா நமக்கு கேப்டன் விஜயகாந்த்தான் நியாபம் வருவார்.. ஆர்யா ரொம்ப நல்லா நடிச்சிருக்காரு. அப்ப பார்த்த சிம்ரன் .. ஆல்தோட்டபூபதி சிம்ரன் இன்னமும் அப்படியே இருக்காங்க. இந்த டைரக்டர் எப்படி இப்படி யோசிக்கிறார்ன்னு தெரியல.. இந்தப்படத்த ஃபேமிலி, குழந்தைகள் அப்படின்னும் எல்லாரும் பார்க்கலாம்.. உடனே இது பொம்மை படமான்னு நினைக்காதீங்க.. உங்கப்பன் மவனே... படம் எல்லாருக்குமான படமா இருக்கும்.


 


                                   


எல்லா படங்களுக்கு பாசிட்டிவான ரிவியூக்களே கொடுக்கிறீர்களே.. நீங்கள் பாசிட்டிவாக சொன்ன படங்கள் ஓடமால் போகியுள்ளதே என்று கேட்க பட்டது? 


அதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், “ நான் மருந்த குடின்னா குடிச்சிருவாங்களா..  10 ஆவது மாடியில இருந்து குதின்னா குதிச்சிருவாங்களா.. அது அவங்க பொழுது போக்குகாக வர்றது. திரும்பவும் சொல்றேன்.. படம் உங்களுக்கு பிடிச்சிருந்தா படத்த ஒரு தடவை பாருங்க.. காதலி இருந்துச்சுன்னா இரண்டு தடவை பாருங்க..” என்று பேசினார். 


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான  ‘சார்பட்டா பரம்பரை ‘ டெடி’ ஆகிய இருப்படங்களும் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ கேப்டன்’. இந்தப்படத்தின் மூலம்  ‘டெடி’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனுடன் ஆர்யா இணைந்திருக்கிறார்.


 






இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். முன்னதாக இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனகளையே பெற்று வருகிறது.