ராக்கி , சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் படம் கேப்டன் மில்லர். நடிகர் தனுஷ் இந்தப் படத்தில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் காணப்படுகிறார். 1930களில் நடக்கும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி கேப்டன் மில்லர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மெயின் வில்லனாக நடித்துள்ள எட்வர்டு ஷெனின்பிளிக் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் அவருக்கு காட்டப்பட்டுள்ளது. அதில் அவருக்கு நடிகர்கள் அஜித், சூர்யா மற்றும் விஜய் புகைப்படங்கள் காண்பித்து அவர்களின் பெயர்கள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் அஜித்தின் புகைப்படத்தினைப் பார்த்து கமல்ஹாசன் என கூறியுள்ளார். இதற்கடுத்து அவருக்கு சூர்யா புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவில்லை. இதற்கடுத்து நடிகர் விஜய் படத்தினைக் காட்டியபோது “ இது விஜய்” என பதில் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையதளத்தினை ஆக்கிரமித்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் இந்த தகவல் தொடர்பான பதிவுகளுக்கு விஜய் ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனை ஆக்கிரமித்து ஃபையர் விட்டு வருகின்றனர். குறிப்பாக வெளிநாட்டு நடிகர்களுக்கெல்லாம் தங்களின் அபிமான நடிகர் யார் எனத் தெரிந்துள்ளது எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.