தமிழ் சினிமாவின் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான லால் சலாம் திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக சிறந்த கம்பேக் என்ட்ரி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தலைவர் படு பிஸியாக அடுத்தடுத்த ஷெட்யூலில் நடித்து கொண்டிருக்க இடையில் கேமியோ ரோலில் மகள் ஐஸ்வர்யா  இயக்கத்தில் உருவாகி ரிலீஸுக்கு மும்மரமாக தயாராகி வருகிறது 'லால் சலாம்' திரைப்படம்.


 




பொங்கலுக்கு ரிலீஸ் :

விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடித்துள்ள 'லால் சலாம்' திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி பட்டையை கிளப்பியது. பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சில பணிகள் மீதம் உள்ளதால் 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் தாமதமாகும் என சில வதந்திகள் பரவி வந்த நிலையில் நிச்சயமாக இப்படம் பொங்கலுக்கு வெளியாகியே தீர வேண்டும் என அதன் இயக்குநர் ஐஸ்வர்யா உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 'லால் சலாம்' பொங்கல் விருந்தாக வெளியாகும் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

கேப்டன் மில்லர் வைத்த ட்விஸ்ட் :

அதே வேளையில் பிரபல இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர்  தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி திரில்லர் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. தனுஷுக்கு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவக்குமார்  மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் சற்றும் தாமதமாக பொங்கலுக்கு வருகிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது படக்குழு.
தடுமாற்றமான சூழல்: 

ஏற்கனவே அயலான், லால் சலாம், அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கில் காட்சிகளை பிடித்து வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக கேப்டன் மில்லர் படமும் இணைந்துள்ளதால்  பெரும் தடுமாற்றமான சூழல் நிலவி வருகிறது.


 


 

ஐஸ்வர்யா - தனுஷ் மோதல் :


 ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதி கடந்த 18 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த திருமண பந்தத்தை முடித்து கொள்வதாக கடந்த ஆண்டு தெரிவித்தனர். இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது முன்னாள் கணவன் மனைவி இருவரின் திரைப்படங்களும் பொங்கலுக்கு நேரடியாக களத்தில் மோதிக்கொள்ள தயாராகிவிட்டர்கள். இதனால் அவர்கள் இடையே இருக்கும் பிரிவு மேலும் அதிகரிக்குமா? என்ற சலசலப்பு கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அறிவித்தது போல நான்கு படங்களுக்கும் பொங்கலுக்கு வெளியாகுமா அல்லது அவற்றின் ரிலீஸ் தேதி தள்ளிபோகுமா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.