கேன்ஸ் திரைப்படவிழாவில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டார். வெள்ளை தேவதையாக விழாவுக்கு வந்திருந்த பூஜா விதவிதமான ஸ்டைலில் போஸ் கொடுக்க, அங்கிருந்தவர் மேலே போகலாம் என்கிறார். அட... இருப்பா என சில பல போஸ்களை தட்டிவிட்ட பூஜா அப்படியே ரெட் கார்ப்பெட்டில்நடந்தார்.. அப்போது அவரது ஆடை படியில் சிக்கி நிற்க அருகில் இருந்தவர் அதனை சரிசெய்து கை தாங்கலாக பூஜாவை மேலே கூட்டிச் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






ஜீவா நடித்த ‘முகமூடி’படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்தப்படம் படுதோல்வியடைந்தது. இதனையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கவனம் செலுத்திய பூஜா ‘ஒக்க லைலா கோசம்’ ‘முகுந்தா’ ‘ரங்கஸ்தலம்’ ‘சாக்‌ஷியம்’ ‘மகரிஷி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறினார்.


 




அண்மையில் இவரது நடிப்பில் ‘ராதே ஷ்யாம்’ ‘ பீஸ்ட்’ படங்கள் வெளியாகின. இந்த இரண்டு படங்களும் படுதோல்வியடைந்தன. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் அவ்வப்போது கவர்ச்சியான படங்களை வெளியிட்டு வருகிறார்.