Cannes 2022: கேன்ஸ் திரைப்பட விழா ஜூரி உறுப்பினரானார் தீபிகா படுகோனே!
Cannes 2022 Deepika Padukone: 2017 ஆம் ஆண்டு சிகப்பு கம்பளத்தில் கம்பீர நடைபோட்ட, தீபீகா படுகோனே, வரும் கேன்ஸ் திரைப்பட விழாவின் ஜூரி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகொனே (Deepika Padukone), நடக்க இருக்கும் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் (Cannes Film Festival) திரைப்பட தேர்வாளர் நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival). இந்த விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். மேலும், இவ்விழாவில், உலகில் பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் ஆகியவற்றில் தேர்தெடுக்கப்பட்டு ப்ரிவியூ காட்சிகள் திரையிடப்படும். இந்த திரைப்பட விழா, திரைத்துறை கலைஞர்களுக்கான தனிப்பட்ட விழா. அதனால், பொதுமக்களுக்கு நிச்சயம் அனுமதி கிடையாது. இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அவர்களின் விண்ணப்பப் படிவங்களை ஜூரிகள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களுக்கு ’கேட் ஓபன்’ என்ற நிலை.
Just In




இப்படியான திரைப்படவிழாவின் ஜூரி உறுப்புனர்களில் இந்தியாவின் சார்பில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழா நிர்வாகம் நேற்று ஜூரி பட்டியலை வெளியிட்டது.
பிரபல பிரான்ஸ் நடிகர் வின்சண்ட் லிண்டன் (Vincent Lindon) ஜூரி குழுவின் தலைவராக நியமிக்கப்படுள்ளார். இந்த ஜூரி குழுவில் பிரிட்டிஷ் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ரெபாக்கா ஹால் (Rebecca Hall), மற்றும் சில முக்கிய பிரபலங்களுடன் நடிகை தீபிகா படுகோனும் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்களால் தேர்தேடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு பால்ம் டி டோன் (Palme d’Or )விருது வழங்கப்படும்.
வரும் மே மாதாம் 17 ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழா தொடங்க இருக்கிறது. மே 28 ஆம் தேதி நடைப்பெறும் பிரம்மாண்ட விழாவில், விருதுகளை ஜூரி அறிவிப்பார்கள்.
பாலிவுட் பிரபலம் நடிகை தீபிகா படுகோனே கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு ஜூரியாக நியமிக்கபப்ட்டிருப்பதற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.