திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival).  கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் திரையிடப்பட்டு வருகிறது. இதிலிருந்து  நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். இந்த 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 2022 கடந்த மே 17 ம் தேதி தொடங்கி வருகின்ற 28 வரை நடைபெற இருக்கிறது. 


பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடந்தனர்.  






இந்தநிலையில், பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே சிவப்பு கம்பள வரவேற்புக்கு பிறகு அவருக்கு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர் இந்தியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டு சென்ற உடை மற்றும் அலங்கார பொருட்கள் வைத்திருந்த சூட்கேஸ் ஒன்றை மிஸ் செய்துள்ளார். இதையடுத்து, தொலைந்துபோன சூட்கேஸை தேடி பூஜா ஹெக்டே மற்றும் அவரது சிகை அலங்கார குழு நாள் முழுக்க அலைந்துள்ளனர். 


இறுதிவரை அந்த சூட்கேஸ் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது. அன்றைய நாள்முழுவதும் பூஜா ஹெக்டே உணவு எதுவும் உட்கொள்ளாமல் சூட்கேஸை தேடியுள்ளார். அதேபோல், இவரது சிகை அலங்கார குழு தேடி தேடி அலைந்ததில் ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டு கீழே விழுகும் நிலைக்கு சென்றுள்ளனர். 


தேடியது போதும் என்று முடிவெடுத்த பூஜா ஹெக்டே தலைக்கு வந்தது தலைபாகையுடன் போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவர் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த வைர நகைகளை கைப்பையில் வைத்திருந்ததால் தப்பித்ததாக தகவலும் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண