தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் மனீஷா கொய்ராலா. இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்த அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இந்த சூழலில், கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனீஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார். அவர் தனது சுயசரிதையான ஹீல்ட்: ஹவ் கேன்சர் கிவ் மீ எ நியூ லைஃப் என்ற புத்தகத்தை ஜனவரி 8, 2018 அன்று மும்பையில் வெளியிட்டார். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மீண்டும் உயிர் பிழைத்து வெளிவருவதைப் பற்றி  எழுதியிருந்தார்.


இந்நிலையில்  தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமான நேற்று, இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர்" என்று, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.


 






மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  “இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண