தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகெங்கிலும் உள்ளனர். மேலும் பல விஜய் ரசிகர் மன்றங்கள் உலகளவில் நடிகரின் பெயரில் பல நற்பணிகளை சமூகத்திற்கு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்திய அளவில் மட்டுமின்றி கண்டங்களை தாண்டியும் விஜய் ரசிகர் மன்றங்கள் ஏராளமான நற்பணிகளை செய்து வருகிறார்கள். ஒண்டாரியோ மாகாணத்தில் ரத்த தானம் வழங்குதல், உணவு வழங்குதல் போன்ற பல சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் ரசிகர் மன்றங்கள் செய்யும் இந்த நற்பணிகளை பாராட்டியுள்ளார் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு. அவர் இளைய தளபதி விஜய் ரசிகர் மன்றத்தின் இந்த சேவையை பாராட்டி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
பர்லிங்டன் நகர மேயரின் வீடியோவில் "எல்லோருக்கும் வணக்கம்! நான் பர்லிங்டன் நகர மேயர் மரியன்னே மீட் வார்டு. எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கனடா ஃபேன் கிளப் உறுப்பினர்களின் ஈடு இணையற்ற சமூக சேவைக்காக தெரிவித்து கொள்கிறேன். அவர்களின் ரத்த தான முகாம் மூலம் ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்குதல் மற்றும் உணவு வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளை பர்லிங்டன் நகரின் செய்து வருகிறார்கள். புத்தாண்டியில் அடியெடுத்து வைத்துள்ள சமயத்தில் இந்த நற்பணிகளுக்கு எனது நன்றிகளையும் மேலும் இதை தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்" என கனடா விஜய் ரசிகர் மன்றத்தை பாராட்டிய கண்ட மேயர் பாராட்டியுள்ள வீடியோ காட்டுத்தீ போல பரவி வருகிறது.
உலகெங்கிலும் உள்ள விஜய் ரசிகர்கள் இந்த நற்பணிகளுக்காக தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.