Buffoon movie : லேட்டஸ்ட் 'பபூன்' ப்ரோமோ வெளியானது... ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

'பபூன்' படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது புதியதாக ஒரு ப்ரோமோவினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 

Continues below advertisement

 

Continues below advertisement

நடிகர் வைபவ் நடித்த 'காட்டேரி' திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியும் பெறவில்லை வசூலையும் பெறவில்லை. அதனை தொடர்ந்து வைப்பது நடித்து ரிலீசாக தயாராக உள்ள திரைப்படம் "பபூன்". படத்தின் பேர்  கோமாளி தனமாக இருந்தாலும் படம் அதிரடி, சஸ்பென்ஸ், திரில்லர் மற்றும் ஆக்சன் கலந்த படமாக தான் உள்ளது என்பது சில தினங்களுக்கு முன்னர் வெளியான ட்ரைலர் மூலம் தெரிகிறது.

 

 

லேட்டஸ்ட் ப்ரோமோ வெளியானது :

அசோக் வீரப்பன் எனும் அறிமுக இயக்குனர் இயக்கிய இப்படத்தில் நடிகர் வைபவ் ஜோடியாக "நட்பே துணை" படத்தில் நடித்த நடிகை அனகா நடித்துள்ளார். இயக்குனர் அசோக் வீரப்பன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார்.  இவர்களுடன் இணைந்து அந்தக்குடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன், தமிழ், மூணார் ரமேஷ், ஆடுகளம் ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தினை தயாரித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது புதியதாக ஒரு ப்ரோமோவினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அழுத்தமான வசனங்களுடன் வெளியாகி இருக்கும் பபூன் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

 

 

செப்டம்பர் 23 ரிலீஸ் :

"பபூன்" திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் ட்ரைலரை தொடர்ந்து வெளியாகியுள்ள இன்ற ப்ரோமோவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

 

அனைத்தின் கலவை பபூன்:

வெளிநாடு செல்ல முயற்சிக்கும் வைபவ் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு வெளிநாடு செல்ல முடியாமல் தவிக்கிறார். எப்படி அந்த சிக்கலில் இருந்து மீண்டு வெளியே வந்தார் என்பதை கொஞ்சம் சஸ்பெனுடன் த்ரில்லிங்காக சொல்லி இருக்கும் படம் தான் பபூன். மேடை நாடக கலைஞராக நடித்துள்ள வைபவ் இந்த திரைப்படத்தில் "வணக்கமே! எங்கள்  வணக்கமே..." என்ற பாடலை பாடியுள்ளார். திரைப்படம் வெளியாக இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. வழக்கம் போல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிச்சயமாக பட்டையை கிளப்பும்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola