தமிழ் சினிமாவின் முன்னணி மாஸ் ஹீரோ பட்டியலில் முதலிடம் வகிப்பவர் விஜய். அவரின் ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை ஏராளம். விஜய் பிறந்தநாள், விஜய் படங்களின் வெற்றி விழா கொண்டாட்டம், படம் ரிலீஸ் என எந்த ஒரு ஸ்பெஷல் தருணமாக இருந்தாலும், அதை கோலாகலமாக கொண்டாடுவது விஜய் ரசிகர் மன்றங்கள்தான். அதில் பல நற்பணிகளும் இடம்பெறும்.
பெங்களூரு தமிழ் பசங்க டீம் லேட்டஸ்ட் போஸ்ட் :
அந்த வகையில் பெங்களூருவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் நடத்தி வரும் பெங்களூரு தமிழ் பசங்க டீம் இந்த புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி நடிகர் விஜயின் போட்டோக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட, ஒரு பக்க 2023 ஆண்டு காலண்டர்களை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இலவசமாக வழங்க உள்ளார்கள். இந்த அறிவிப்பை ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளனர்.
இலவச விஜய் பிரிண்ட் செய்யப்பட்ட காலண்டர் :
இந்த இலவச விஜய் 2023 காலண்டர் விநியோகம் நவம்பர் 27ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் உள்ளவர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வெளி மாநிலத்தில் இருப்பவர்கள் இலவச விஜய் 2023 காலண்டரை பெற விரும்பினால் கொரியர் சார்ஜ் ரூ.100 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். ஸ்டாக் உள்ளவரை மட்டுமே இந்த இலவச விநியோகம் நடைபெறும் என்பதால் விரைவில் முந்துங்கள். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
48வது பிறந்தநாள் கொண்டாட்டம் :
BTS விஜய் மக்கள் இயக்கம் இது போல பல நற்பணிகளை மேற்கொண்டுள்ளது. நடிகர் விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள ராமச்சந்திரபுரம் பகுதியில் உள்ள 200 மகளிருக்கு புடவை மற்றும் 400 தொழிலாளர்களுக்கு உணவு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு ரிலீஸ் ஃபீவர்:
நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பொங்கல் 2023 அன்று உலகளவில் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே...' பாடல் வெளியாகி ரசிகர்களை குஷியாகியது. அதே போல பொங்கல் ரிலீஸாக நடிகர் அஜித் நடித்திருக்கும் 'துணிவு' திரைப்படமும் வெளியாவதால் பரபரப்பு உச்சத்தை அடைந்துள்ளது.