Harish kalyan: விரைவில் டும் டும் டும்..போட்டோவுடன் திருமண அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாணுக்கு குவியும் வாழ்த்துகள்!

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் போட்டோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் போட்டோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Continues below advertisement

ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்க்கை துணையோடு கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  “புதிய மங்களகரமான தொடக்கம்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப்பதிவை பார்த்த ட்விட்டர் வாசிகள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் திருமண அறிவிப்பை உறுதிப்படுத்தியிருக்கும் ஹரிஷ் கல்யாண், அந்தப் பெண் யார்? உள்ளிட்ட விபரங்களை வெளியிடவில்லை. 

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’  ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. 

 

இதனையடுத்து ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த  ‘ஓ மன பெண்ணே’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் போது நெருங்கிய பழகியதாக தகவல்கள் வெளியாகின. படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜி.வி. பிரகாஷை வைத்து  ‘அடங்காதே’ படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்  ‘டீசல்’ மற்றும் ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக ‘டீசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola