பாய்காட் பிரம்மஸ்திரா ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது குறித்து படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி பேசியிருக்கிறார். 


இது குறித்து படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி பேசும் போது, “ அந்த சமயத்துல எங்களுக்கு நிறைய வேலை இருந்துச்சு. அதுலதான் நாங்க கவனம் செலுத்திட்டு இருந்தோம். படம் வெளியாவதற்கு முன்னாடி விஎஃப்எக்ஸ் தொடங்கி எடிட், சவுண்ட்ன்னு ஏகப்பட்ட வேலை. நிறைய நேரங்கள்ல ரன்பீர், ஆலியா, எடிட்ல உட்கார்ந்து விஎஃப்எக்ஸ், சவுண்ட் அப்படின்னு எல்லா விஷயங்களையும் கவனிச்சாங்க. நான் பாசிட்டிவிட்டிய ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புனேன், நான் எதிர்பார்த்த மாதிரியே பிரம்மஸ்திரா படத்திற்கு பாசிட்டிவான ரெஸ்பான்சே வந்திருக்கிறது” என்று பேசியிருக்கிறார். 


 






அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியானது.


 






ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்ததுமே படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் படத்தை கடுமையாக தாக்கி பேசியிருந்தார். ஒரு சாராருக்கு படம் பிடித்திருந்தாலும், தொடர்ந்து படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில் படம் தோல்வியை  சந்தித்து இருக்கிறது. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மற்றும் கரண் ஜோஹர் இணைந்து அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்து இருந்தனர். நான்கு மொழிகளிலும் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டார்.