மாடலாகவும், கவர்ச்சி நடிகையாகவும் அறியப்பட்ட புவனேஸ்வரி இப்போது ஆன்மீக வழியில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார். ஒவ்வொரு கோயிலாக சென்று அன்னதானம் வழங்கி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவரைப் பற்றி முழுவதுமாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
பூனை கண் புவனேஸ்வரி:
'கந்தா கடம்பா கதிர்வேலா' என்ற படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர் தான் இந்த புவனேஸ்வரி. நல்ல ஹைட், அதற்க்கேற்ற வெயிட்.. மயக்கும் பூனை கண் என பேரழகியாக இருக்கும் இவரை, பலருக்கு பூனை கண் புவனேஸ்வரி என்றால் தான் தெரியும். கவர்ச்சிக்கு பெயர் போன புவனேஸ்வரி தனது கவர்ச்சியால் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். பிரியமானவளே, பட்ஜெட் பத்மநாபன், ரிஷி, பாய்ஸ், என்னவோ புடிச்சிருக்கு, குண்டக்கா மண்டக்கா, தலை நகரம் என்று ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கோகுலம் வீடு, சித்தி, சொர்க்கம், ராஜ ராஜேஸ்வரி, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் என்று பல இவரின் சீரியல் லிஸ்டும் பெருசு தான்.
பாலியல் வழக்கில் கைது
சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போது பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு குற்றமற்றவர் என்று இவருக்கு தீர்ப்பு கிடைத்து. இந்த தீர்ப்புக்காக இவர் பல வருடங்கள் போராடினார். இந்த பாலியல் கேஸ் தான், புவனேஸ்வரியின் சினிமா வாழ்க்கையையே குளோஸ் செய்தது. சீரியலில் வாய்ப்பு கிடைத்த போதிலும், ஒரு சில காரணங்களால் முழுமையாக திரையுலகை விட்டே விலக முடிவு செய்தார்;
தன்னை முற்றிலுமாக ஆன்மீக வழியில் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டதாக கூறும் புவனேஸ்வரி... இந்த முடிவு குறித்து கூறிய விளக்கம் கேட்பவர்களை வியக்க வைக்கிறது. அப்படி அவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
" தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தான் என்னுடைய சொந்த ஊர். குடும்ப சூழல் தான் என்னை ஒரு நடிகையாக மாற்றியது. குடும்ப கஷ்டத்தை போக்க, கவர்ச்சி ரோலில் கூட துணிந்து நடித்தேன். அப்படி நடித்துக் கொண்டிருந்த போது, சிலரின் சதியால் பாலியல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றேன். அதன் பிறகு நீண்ட போராட்டத்திற்கு பிறகு நான் குற்றமற்றவள் என்பதை இந்த ஊருக்கே நிரூபித்து வெளியில் வந்தேன். ஆனால், இந்த சமூகத்தின் பார்வை இப்போதும் என்னை ஒரு குற்றவாளியாக தான் பார்க்க வைக்கிறது.
ஆன்மீகத்தில் இறங்கியது ஏன்?
திக்கற்றவர்களுக்கு இறைவனே கதி, அதனால் என்னுடைய மனதில் ஏற்பட்ட மாற்றமே என்னை ஆன்மீக வழியில் பயணிக்க வைத்தது. என்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை இறை பணிக்காக நான் அர்ப்பணித்துவிட்டேன். என்னை முழுவதுமாக துறவறத்துக்காக கொடுத்துவிட்டேன். காசிக்கு சென்று சித்து பெற்றேன். நான் செல்லாத கோயில்களே கிடையாது. எல்லா கோயில்களுக்கும் சென்று வந்தேன். பள்ளி வாசல், தேவாலயங்களுக்கு கூட நான் சென்று வருகிறேன். பசியால் நான் பட்டினி இருந்த காலங்களை எண்ணிக்கையில் சொல்லிவிட முடியாது.
அப்படிப்பட்ட ஒரு சூழல் இனி இந்த உலகில் வேறு யாருக்கும் வர கூடாது என்பதற்காக நாள்தோரும் 300 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன். எனக்கு சொந்தமாக சென்னையில் உள்ள வீடுகளை வாடகைக்கு விட்டு அதன் மூலமாக வரும் வருமானத்தை வைத்து அன்னதானம் செய்து வருகிறேன். இதுவே பொங்கல், தீபாவளி என்றால் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேருக்கு உணவு, உடை வழங்கி வருகிறேன். யாரிடம் உதவி கேட்பதில்லை என கூறியுள்ளார். புவனேஸ்வரியின் இந்த மாற்றம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.