NationalAward2022; மண்டேலா திரைப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு விருதுகளையும் திரைப்படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கு சமர்ப்பிக்கிறேன் என படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 


நேற்று தேசிய திரப்பட விருதுகள் மத்திய அரசு அறிவித்தது. அதில் தமிழில், அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா,  இயக்குநர் சுதா கொங்காரா இயக்கி சூர்யா நடித்த சூரரைப் போற்று மற்றும் இயக்குநர் வசந்த் இயக்கிய  சிவரஞ்சினியும் சில பெண்களும் என மூன்று  திரைப்படங்கள் ஒட்டு மொத்தமாக பத்து தேசிய விருதுகளை அள்ளியது. 


இதில் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடித்து ஓடிடி தளத்தில் ஒன்றான நெட்ஃபிளிக்ஸ்  வெளியானது. முடிதிருத்தும் தொழில் செய்யும் ஒருவரை மைய்யமாக வைத்து வாக்கு அரசியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் இன்றைய எதார்த்த நிலை குறித்து படம் அழுத்தமாக உருவாக்கப்பட்டிருக்கும். மேலும், மிகவும் நிதர்சனமான திரைக்கதை மற்றும் அதற்கு பலமான வசனங்களுடன் படம் வெளிவந்தது. படத்தில் நடிகர்கள், இசை, படத்தொகுப்பு மற்றும் படத்தின் ஒட்டுமொத்த குழுவின் பணியும் பெரும் பாராட்டினைப் பெற்றது. 


இந்நிலையில், நேற்று தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில், மண்டேலா திரைப்படம் சிறந்த வசனகர்த்தா மற்றும் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதுகளை வென்றது. இந்த இரண்டு விருதுகளையும் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் பெறவிருக்கிறார்.  இது குறித்து தனது டிவிட்டர் பக்கதில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இப்படத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு விருதுகளும் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு சமர்ப்பிகிறேன். குறிப்பாக யோகிபாபு அண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன். மேலும், எனக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும், எனது குடும்பம், நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள்  மற்றும் இப்படம் வெற்றிபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 






மேலும், சூரரைப் போற்று திரைப்படத்தின் குழுவிற்கும் சிவரஞ்சினியும் சில பெண்களும் படத்தின் குழுவிற்கும் வாழ்த்துகள். 68வது திரைப்பட விழாவில் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் எனவும், தேசிய திரைப்பட விருது ஜூரிகளுக்கும், இந்திய அரசிற்கும் நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண