அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ம் தேதி வெளியாக உள்ளது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2:58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது.  ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் புக்கிக் தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பல திரையரங்குகள் முன்பதிவுக்கு தயாராகி வருகின்றன. இது ஒரு புறமிறக்க படக்குழு பரபரப்பாக விளம்பரம் செய்து வருகிறது. தினமும் புதுப்புது ப்ரோமோக்களை பதிவிட்டு வருகிறார் தயாரிப்பாளர் போனி. இதுபோக பேருந்து, ரயில் என பார்க்கும் இடமெல்லாம் வலிமை விளம்பரம்தான் கண்ணில் படுகிறது. 

பெங்களூருவில்...

வலிமை படத்தின் விளம்பரமாக இன்று பெங்களூருவில் வலிமை ரிலீசுக்கு முன்னதான நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார் போனி கபூர். இன்று இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் உங்களையெல்லாம் சந்திக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள சில நடிகர், நடிகைகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வலிமை படத்தினை நேரடியாக  ஓடிடி வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்ட போதிலும், போனி கபூர் அதனை முழுவதுமாக தவிர்த்துவிட்டார்.  இது குறித்து அவர் கூறும்போது, “வலிமை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை கொண்டு வந்தன.  ஆனால் “வலிமை” போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும். அதனால் ஓடிடிக்கு கொடுக்க யோசிக்கவில்லை” என்றார்.