பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் - இயக்குனர் அட்லி கூட்டணியில் உருவாகி வந்த  ‘ஜவான்’திரைப்படத்தின் முன்னதாக ஷூட்டிங் முன்னதாக சென்னையில் நிறைவடைந்தது.


இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது சென்னை ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். ஷாருக்கான் சென்னை ரசிகர் மன்றம் எனும் பக்கத்தில் செயல்பட்டு வந்த ரசிகர்கள் முன்னதாக ஷாருக்கானை சந்திக்க வேண்டி அவரது உதவியாளர்களை அணுகியுள்ளனர்.


இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்தவுடன் இந்த ரசிகர் குழுவைச் சேர்ந்த 20 பேரை ஷாருக்கான் சந்தித்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் அறைகள் புக் செய்துகொடுத்தும், அவர்களுக்கு பரிசுகள் கொடுத்தும், ஒவ்வொருவருடனும் போதிய நேரம் செலவிட்டும் ஷாருக்கான் மகிழ்வித்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக இந்த ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.






ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன் தாராவும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். தவிர தீபிகா படுகோன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.






முன்னதாக ஜவான் பட செட்டை நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். மேலும் சென்னையை விட்டுக் கிளம்பும் முன் ஷாருக்கான் அட்லி பிறந்தநாளை விஜய்யுடன் இணைந்து அவரது படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.