ஜவான் படத்தின் முன்னோட்ட விழாவில் வெளியீட்டு விழாவுக்காக சென்னைக்கு வருகை தந்த ஷாருக்கானை பார்ப்பதற்காக திரண்ட ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறினர். 


அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் வரும் 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது. நயன்தாரா, விஜய்சேதுபதி என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாகிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஷாருக்கான், விஜய்சேதுபதி, அட்லீ உள்ளிட்ட படக்குழுவினரும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்றுள்ளனர். 


இந்த நிலையில் ப்ரீ ரிலீஸ் விழாவுக்கு ஷாருக் கான் வருகை தருவதை அறிந்த ரசிகர்கள் அவரை காண கூட்டமாக திரண்டனர். ரசிகர்களை பார்த்ததும் காரில் இருந்து வெளியே வந்த ஷாருக்கான், கையசைத்து விட்டு சென்றார். அப்பொழுது கட்டுக்கடங்காமல் இருந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.


kiNG Khan👑 is ready to roar in south.#jawan is on his way....
WELCOME TO CHENNAI KING SRK, #JawanAudioLaunch#DhoniVsTendulkar #viralvideo #VickyKaushal #AsiaCup23 #Pushpa2TheRule #AjayDevgn #JawanPreReleaseEvent pic.twitter.com/nk4KetlkVg


— Ranjeet Kumar Nishad (@RanjeetKum73269) August 30, 2023






விழாவில் பங்கேற்க வந்த இசையமைப்பாளர் அனிருத்தை பார்த்த ஷாருக்கான் அவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.