Ranveer Singh: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்சுடன் இணைந்து நடித்த விளம்பரம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் சிலர் அழகுசாதனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் நடித்த விளம்பர வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பாலிவுட் ஸ்டாரான ரன்வீர் சிங், ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் இணைந்து ஆண்களுக்கு உதவும் வகையிலான பாலியல் ஆரோக்கியம் பற்றிய விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
சீரியல் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரத்தில் கணவருடன் சரியான உறவு இல்லாத மனைவி வீட்டை விட்டு வெளியேறுகிறார். அந்த மனைவியின் கணவராக ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணை ரன்வீர் சிங் தடுத்து நிறுத்தும்போது, அவரது மாமியார் அடிக்கிறார். இப்படி காமெடியாக ஆண்களுக்கு உதவக்கூடிய விளம்பரத்தில் ரன்பீர் சிங் நடித்திருப்பது நெட்டிசன்ஸை கிண்டலடிக்க வைத்துள்ளது. ஆபாசப்பட நடிகரை இந்திய விளம்பரத்தில் பார்த்த நெட்டிசன்ஸ் வாயடைத்துப் போனதுடன், விளம்பரத்திற்கு இப்படி ஒரு ஐடியாவை கொடுத்த அந்த இயக்குநர் யார் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒரு சிலர் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, ரன்வீர் சிங்குடன் ஆபாசப்பட நடிகர் ஜானி சின்ஸ் நடித்துள்ளதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்றும், பாலிவுட்டில் சரியான ஆளை தான் அழைத்து வந்துள்ளனர் எனவும் கிண்டலடித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து வந்தாலும், திரைப்படங்களைக் காட்டிலும் விளம்பரங்களில் நடிப்பதிலேயே ரன்வீர் சிங் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். முன்னதாக ஆணுறை தொடர்பான விளம்பரங்களில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். தொடர்ந்து 2022ம் ஆண்டு நிர்வாண போட்டோஷூட் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங், தீபிகா படுகோனை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது பாலுறவு தொடர்பான விளம்பரத்தில் நடித்துள்ள ரன்வீர் சிங் மீண்டும் டிரெண்டாகி வருகிறார்.
மேலும் படிக்க: Suriya: ஆதர்ச இயக்குநர் கே.வி.ஆனந்த் குடும்பத்தை சந்தித்த சூர்யா: சிவக்குமார் தந்த அன்புப் பரிசு!